காதல் சாட்சி நிலா
நிலவே நீ தான் சாட்சி
எங்கள் காதலுக்கு
என்றிருந்தோம் -என்னவன்
என்னைவிட்டு ஏனோ பிரிந்தான்
தனிமை வந்து என்னை வாட்ட
என்னவனை மறக்கவும் முடியவில்லை
தினமும் முற்றத்தில் வந்து
நிலவை கேட்பேன் -நிலவே
இன்று எந்தன் நிலமையைப் பார்த்தாயா
என்னவனோ என்னை விட்டு பிரிந்துவிட்டான்
என் மனமோ அவனைவிட்டு பிரியவில்லை
எங்கள் காதலுக்கு சாட்சி நிலவே
என்னவனை கண்டு எனக்காய்
தூது செல்வாயோ எம்மை மீண்டும்
சேர்ப்பாயோ என்று கேட்டேன்
எனக்காய் வெண்ணிலாவும்
அத்திக்காய் கண்ணீர்விட என்
தனிமையைக் கண்டு மனம் நொந்து
நிலவின் அமானுஷ நட்பில்
எனக்கோர் ஆறுதல் கண்டேன்
இப்போது முற்றத்தை விட்டு பிரிந்தது நிலவும்
எனக்காய் தூது சொல்ல என்னவனைக் கண்டு
எத்தனை பெரிய உள்ளம்
எங்கள் காதல் சாட்சி நிலவுக்கு !