கானல் கனவுகள்
சந்தித்த பின்
பரிமாறிக்கொள்ளும்
பார்வைகள்..
பேசிக்கொள்ளும்
மௌனங்கள்..
நினைவின்
தேக்கிடத்தில்
சேமிக்கத்தக்க
இத்தருணங்கள்..
இதோ
இக்கணத்தில்
சொல்லாமல்
கொள்ளாமல்
விடிந்துவிடுகிறது..
சாளரத்தை
திறந்ததும்
அறைப்பிதுங்கும்
வெளிச்சங்கள்..
இரவின் விடுதலையா?
விடிந்ததும்
விழிக்க வேண்டுமென்று
ஏன் இத்தனை நிபந்தனை?
அவசியம்
நான் எழத்தான்வேண்டுமா?
கனவில் மட்டுமே
என்னுடன்
உறவாடும்
உன் அருகாமையிலிருந்து...