அன்பு
உன் மீதான
என் பிரியத்தை
எப்படி சொல்வது..
ஒற்றை வார்த்தை போதுமானதா...
இல்லை ...
ஓர் விரல் கோர்வை போதுமா ?
இல்லை ...
ஓர் அணைப்பு போதுமானதா...
இல்லை ...
என் ஒரு முத்தம் சொல்லுமா ?
எப்படி சொல்வது...
உன் மீதான பிரியம்
என்னை கொன்று
என் சுயத்தை
அழித்து கொண்டிருப்பதை ...
எப்படி சொன்னால்
நீ என் முழுமையான
அன்பை உணர்வாய் ..
என் அன்பின்
ஒரு சிறு பகுதியைகூட
உன்னில் வெளிப்படுத்த முடியாத
என்னால்...
எப்படி உன் மீதான
மொத்த அன்பையும்
வெளிப்படுத்த முடியம்...
இப்படி தயங்கி நின்றே
இந்த அன்பு..
இந்த பிரியம் ..
இதயத்தை மெல்ல மெல்ல
செயல் இழக்க செய்கிறது ....