ரோசாப்பூ ரவிக்கைக்காரி

ரோசப்பூ ரவிக்கைக்காரி
உன் விழிவீசும் தென்றலிலே
மனகூந்தல் காற்றிலாட
உன் கார்கூந்தல் மல்லிகையில்
என் மனம்வந்து கீதமாய் நீந்தும்

விழியாலே தூதுவிட்டு
என் விழி எழுதும் காதல் மெட்டு
உன் இதழினிலே தொட்டு தொட்டு
இளமைவரை பாயும் சிட்டு

வண்டாடும் விழிகள் கொண்டு
திண்டாடும் நெஞ்சில் வந்தாய்
தீண்டிடும் தென்றல் கொண்டு
தேரோட்டி நானும் வந்தேன்

பொன்வண்ண வானம் ஒன்று
பூபந்தல் போட்டு நிற்க
பெண்வண்ண மயிலும் வந்து
தோகைவிரித்தாடி நிற்க

பூஞ்சோலை வசந்த காற்றில்
பூமேடை மஞ்சம் ஆட
பூந்தென்றல் காற்றினோடு
மோகமும் சேர்ந்து பாடும்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (19-Aug-17, 12:25 pm)
பார்வை : 171

மேலே