சுபா பிரபு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுபா பிரபு
இடம்:  chennai
பிறந்த தேதி :  03-Oct-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jan-2015
பார்த்தவர்கள்:  443
புள்ளி:  142

என்னைப் பற்றி...

தேடுகின்ற வாழ்வில்...
தினம் தினம் தேடிக்கொண்டே இருக்கிறேன்...
தேடலின் முடிவு.......
உலகத்தின் முடிவு என்பதை உண்ர்ந்தும்......

என் படைப்புகள்
சுபா பிரபு செய்திகள்
சுபா பிரபு - சுபா பிரபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2017 5:00 pm

வேண்டாம் என்று
நிராகரிக்க ஒரு நொடிபோதும்
ஆனால்..
என்னை நீ நிராகரிக்கும் போது
என் அன்பை உதாசினப்படுத்தும்போது
ஒரே ஒரு நிமிடம்
நம்மை நாம்
இடம் மாற்றிக் கொள்வோம்..
நீ நானாக...
நான் நீயாக...
சுபா பிரபு.

மேலும்

உள்ளத்தில் முதன் முறை எழுதிய பெயரை மரணம் வரை அழிக்கமுடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:09 am
நன்றி பவித்ரா ... 13-Oct-2017 5:12 pm
பிரிவின் வழியை எவ்வாறு உணர்த்தினாலும் உணரமுடியாதுஅல்லவா....! அனுபவத்தின் அருமை உமது வரிகள்.... 13-Oct-2017 5:03 pm
சுபா பிரபு - சுபா பிரபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2017 4:57 pm

இனி இழக்க எதுவும் இல்லை..
உனக்கும் எனக்கும்....
இன்னமும் கொஞ்சம்
மிஞ்சம் எஞ்சி இருக்கும்
கண்ணீரும்.....
உயிர் இருக்கும் வரை
நம் நினைவுகள் மட்டுமே...
இது போதும்....
இன்னும் கடவுள் கொடுக்கும்
நாட்களை கடந்துவிட....
அடுத்த ஜென்மம் எல்லாம்
நம்பிக்கையில்லை எனக்கு..
இதே என் எதிரே இருக்கும்
உன்னுடன் எனக்கு
யாராலும் அளவிட
முடியாத காதல் இருந்தும்....
அதை என் கண்ணீரில் மறைத்து
இப்போது எந்த நட்பும்,
துளி உறவும் இல்லையெனில்
நிலை இல்லாத,
நிச்சயம் இல்லாத
அடுத்த ஜென்மம் எதற்கு...
நாமும் நம் காதலும் வாழ்வதற்கு....
சுபா பிரபு

மேலும்

ஜென்மங்கள் என்பது இன்று வாழ முடியாத உள்ளங்கள் நாளை வாழ நினைக்கும் ஒரு எண்ணம். முதன் முறை கிடைத்த வாழ்க்கையை திருப்தியாக வாழ்வதில் தான் நினைவுகளின் போராட்டமும் கனவுகளின் ஆக்ரோஷமும் இனிமையாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:02 am
நன்றி பவித்ரா ... 13-Oct-2017 5:11 pm
நினைவுகள் மட்டுமே நிலையானது, அருமை 13-Oct-2017 5:06 pm
சுபா பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 5:10 pm

சிறு துளி...

நீ விரும்பினாலும்,
நீ விரும்பாவிட்டாலும்,
என் அன்பின் மழையில்
நினைந்து கொண்டு இருக்கிறாய்...
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு நொடியும்
என் அன்பு மழையில்
என் உயிரை உருக்கி
உனக்காக உருகிக்கொண்டிருக்கிறேன்..
நான் கேட்பதெல்லாம்
ஒன்றே ஒன்று தான்...
உன் அன்பின்
பெருமழை வேண்டாம் எனக்கு..
நீ யாரையே ,
உன் அன்பில்
நினைக்க வைக்கையில்..,
ஒரே ஒரு
சிறு துளி தாயேன்...
பெருமழையில் கிடைக்கும்
சிறு சாரலாய்..
உன் அன்பை எனக்கும்....
- சுபா பிரபு.

மேலும்

நீ நினைவுகளை கிள்ளித்தாந்தாலும் நான் கண்ணீரை அள்ளியே இறைக்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:23 am
சுபா பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 5:08 pm

என்னை சுற்றி
கடலளவு,
எண்ணிலடங்கா
வரைமுறையற்ற
அன்பு சூழ்ந்து இருக்க,
நானே....
ஒரு சிறு குடுவையில்
அடைக்க பட்ட நீராய்,
உன்னை தாண்டி
உன் நினைவுகளை தாண்டி ,
வெளியேற முடியாமல்
உனக்குள் மூழ்கி நீச்சலடித்து,
உன் அன்பில் மட்டுமே
என் மூச்சு காற்றை சுவாசிக்கிறேன் ...
மீன் தொட்டியில் நீந்தும் மீனாய்...
மூச்சற்று போகும் நாளில்..
என் அன்பு கடல்
மொத்தமும் ,
என் குடுவையில் சிறிதளவும் ஒட்டாதுயென உணர்ந்தும்..
எதிர் நீச்சல் போடுகிறேன்...
நம் காலத்தோடு...
- சுபா பிரபு

மேலும்

தூரம் போனாலும் விலகிச் சென்றாலும் காதல் கையளவு இதயத்தில் கடலளவு நினைவுகளை கரு சுமக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:20 am
சுபா பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 5:06 pm

உன் நினைவுகள்
என்னை துடிக்க துடிக்க கொன்று
உன் இரையாக்கி
என் இரவுகளை
இன்னமும் யாருமே
அறிந்திட ஒரு கொடூர
இருளில் தள்ளி
சிரிக்கிறது
- சுபா பிரபு

மேலும்

தனிமையும் ஒரு போர்க்களம் தான் சில நினைவுகளோடு வாழ்க்கையை போராட திணிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:19 am
சுபா பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 5:05 pm

பிரிந்து வந்த பின்
வந்த பாதையை கூட
திரும்பி பார்க்காதே என
உள் மனது எனக்கு
ஓராயிரம் முறை
கட்டளை இட்டது...
புத்தி சொன்னாலும்
மனது கேட்காமல்
நீ என்னை
விட்டு சென்ற
அதே இடத்தில் இன்னமும்
காத்திருக்க தொடங்கியது...
என் காதல்...
நீ என்னிடம்
திரும்பி வந்து விடுவயென...
-சுபா பிரபு

மேலும்

உண்மையான நேசத்தை புரியாதவர்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வாழ்வதை வெறுத்து போய்விடுகின்றனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 10:16 am
சுபா பிரபு - சுபா பிரபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2017 2:42 pm

ஆயிரம் முறை ஒத்திகை
பார்த்துவிட்டேன்
என் கண்ணாடியில் ...
என் தாய் மொழி
முழுவதும் அலசி ஆராய்ந்து
என் காதலை சொல்ல
அழகான வார்த்தைகள்
ஓராயிரம் கண்டுவிட்டேன் ...
உன்னுடன் தனிமையில் இருக்கும்போது
ஊர் உலக நடப்பு
அனைத்தும் பகிர்ந்து விட்டேன் ..
ஆனால்
என் காதலை
உன்னிடம் சொல்ல
எத்தனிக்கைலில்
என் சப்த நாடியும் நின்று
பேச வார்த்தைகள் அற்று
என் இதயம் மட்டுமே
அளவுக்கு அதிகமாய் துடிக்கிறது ....
உன்னிடம் சொல்லாத
என் பிரியமான அன்பு ..
வெளிப்படுத்த இயலாத
என் காதலை ,
சொல்ல சொல்லி கொல்கிறது
என் உயிர் ...
ஆனால்
வாய் பேச இயலாத
மழலையாக கண்ணீர்
மட்டும் பேசுகிறது ....

மேலும்

நன்றி முஹம்மது .. 19-Sep-2017 6:50 pm
கண்ணீர் சிந்துகின்ற வரை சுமைகளை தாங்களாம் அவைகளும் தீர்ந்து விட்டால் மரணமே ஒற்றையடி பாதை 17-Sep-2017 6:02 pm
சுபா பிரபு - சுபா பிரபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2017 1:05 pm

நீதி தேவதையின்
கண் கட்டு
திறக்கப்பட்டதோ ...

அவள் கையில் உள்ள
தராசு தடம் மாறி
தவித்து கொண்டிருக்கிறது.
அநீதிக்கும்
அதிகாரத்தித்திற்கும்
அடங்கி
பயந்து கொண்டு....

மேலும்

நன்றி முஹம்மது .. 19-Sep-2017 6:45 pm
வக்கில்மார்கள் குருடானால் நீதி தேவதையும் ஒரு நாள் வெளிச்சம் காணலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 6:12 pm
சுபா பிரபு - சுபா பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2015 1:16 pm

அடுத்த ஜென்மத்தில்,
உன்னை மகளாக கேட்டேன்....
அடுத்த ஜென்மம்
எனக்கு இல்லையென்று
இப்பொழுதே முந்தி சென்றுவிட்டாயோ ....?
என் மகளாய் பிறந்து
என் ஆசையயை நிறைவேற்ற
என் அம்மா .....

மேலும்

அழகு!! 19-Jul-2017 4:19 pm
அருமை...வாழ்த்துக்கள்... 31-May-2015 5:39 pm
நன்றி ................ 10-Feb-2015 2:57 pm
நன்றி ................ 10-Feb-2015 2:57 pm
சுபா பிரபு - அரவிந்த்.C அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2015 9:02 pm

ரத்தத்தை பாலாக்கி
என் பசியாற்றி,
என் பிறப்புக்காக
ஒரு மறுபிறப்பு
பிரசவத்தில் எடுத்த,
என் தாய்க்கு
ஒரு கவியெழுத ஆசைப்பட்டேன்...

தமிழ்த்தாய் துணை கொண்டு
கவியின் உச்சத்தை தொட்டு எழுதினாலும்
ஈடாகுமோ
அம்மா என்ற வார்த்தைக்கு..

கருவில் நான் உதித்த
முதல் நொடி முதல்
எனக்காகவே வாழ துவங்கிய
தியாகத்திற்கு நிகராய்,
எத்தனை
தங்கக்கட்டிகள் வைத்தாலும்
ஈடாகுமோ...

உறக்கத்தை துறந்து
உணவினை மறந்து
பத்தியத்தின் பக்குவத்தை புரிந்து
தன்னை மறந்திருப்பாள் அவள்...

என்னால் வலி பிறக்க
அதை சந்தோஷ கண்ணீரால்
ரசித்திருப்பாள்...

உனக்கு
வலி கொடுத்ததால் தானோ
அழுதுகொண்டே

மேலும்

மிக்க நன்றி நட்பே.. உங்கள் வருகையில் மகிழ்ச்சி... 21-Feb-2015 6:49 pm
அன்னையின் பிரிவும் மகனின் ஏக்கமும் வரிக்கு வரி சிலிர்க்கவைக்கிறது 16-Feb-2015 10:50 pm
நன்றி நட்பே 14-Feb-2015 8:39 pm
அருமை , 10-Feb-2015 12:56 am
சுபா பிரபு - சுபா பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2015 2:55 pm

காதல்யென்னும் இன்ப சோலையில்
காதல் தந்தது இன்பத்தை தவிர அனைத்தும்...
விழி முடி கனவு கண்டேன், பகலில்
விடை தெரியாத வினாவாக நான்….

விடியகாலை மட்டும் கண்வுறங்கி
விடியலை தொலைத்தேன், வாழ்வில்….
விளக்கி சொல்ல முடியாத
விடுகதையானது என் வாழ்க்கைஉன்னால்.

பிணமான என் உயிரை பெயர்த்தெடுத்து
பிணம் தின்னும் கழுகாக உன் நினைவுகள்..
பிணமான என் இதயத்தை பிணமான
பின்னும் போர்த்தொடுத்து கொல்கிறேன் ஓராயிரம் முறை……

பாதை தெரியாத ஊருக்கு பயணம் செய்யும்
பார்வை அற்றவனின் வழியை விட கொடியது என் சாபம்…
கவிதையாக என் வாழ்வு தொடங்கி சோக
கதையாக முடிய காலம் போட்டதோ கணக்கு…..

கனவுகளை வெறுக்கிறேன், நினைவுகளை வெ

மேலும்

அருமை..அருமை... 28-Jan-2015 4:56 pm
மிக நன்று தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Jan-2015 4:05 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (27)

இவரை பின்தொடர்பவர்கள் (28)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
மேலே