மறக்க முடியாத நினைவுகள்…

காதல்யென்னும் இன்ப சோலையில்
காதல் தந்தது இன்பத்தை தவிர அனைத்தும்...
விழி முடி கனவு கண்டேன், பகலில்
விடை தெரியாத வினாவாக நான்….

விடியகாலை மட்டும் கண்வுறங்கி
விடியலை தொலைத்தேன், வாழ்வில்….
விளக்கி சொல்ல முடியாத
விடுகதையானது என் வாழ்க்கைஉன்னால்.

பிணமான என் உயிரை பெயர்த்தெடுத்து
பிணம் தின்னும் கழுகாக உன் நினைவுகள்..
பிணமான என் இதயத்தை பிணமான
பின்னும் போர்த்தொடுத்து கொல்கிறேன் ஓராயிரம் முறை……

பாதை தெரியாத ஊருக்கு பயணம் செய்யும்
பார்வை அற்றவனின் வழியை விட கொடியது என் சாபம்…
கவிதையாக என் வாழ்வு தொடங்கி சோக
கதையாக முடிய காலம் போட்டதோ கணக்கு…..

கனவுகளை வெறுக்கிறேன், நினைவுகளை வெறுக்கிறேன் …
கனவும் நினைவும் ஆசையை அதிகரிப்பதால்..
இரவு முழுவதும் விழிதிறந்து கனவு கண்டேன்,
இரவில் கண்ட கனவை பகலில் நினைத்து ஏங்குகிறேன்….

வாழ்க்கை பாதையில் வழிவிட்டு விலகி
வாழமுடியாமல் துடிக்கிறது இளமை…
ஆயிரம் கனவுகள் கன்ட காதல் நெஞ்சம், ஓர்
ஆயிரம் முறை வெடித்து சிதறுகிறது ஏமாற்றத்தினால்…

அணு அணுவாக என் இதயத்தை பெயர்த்தேன்,ஓவ்வொரு
அணுவிலும் உன் நினைவுகள்.., கண்மூடி
விழிதிறந்தேன், கண்ணீராய் உன் நினைவுகள்…
விளக்கி சொல்லமுடியாத கடலாய் உள்ளம்….

வாழ்ந்துவிட்டு சாக நினைகிறேன்., உன்னோடு அல்ல…
வாழ்க்கையை தொலைத்தால்,கனவுகளோடும்..
உன் நினைவுகளோடும் மட்டும்,
உன் மரண நாள் வரையிலும்…..

சிரித்து கொண்டே அழுகிறேன்…
சிரிப்பு உதடுக்கு மட்டும், உள்ளத்திற்கு அல்ல......
அழுகையே…. ஆயுள் வரை…….. அணு
அணுவாக கொல்லும் உன் நினைவுகளோடு…..

இறந்து விட்ட இதயத்திற்கு மீண்டும் மீண்டும்
இறந்தகாலமே உயிர் கொடுக்கிறது…இனி
எதிர் காலமே, பிணத்திற்கும் உயிர் கொடுத்து கொண்டிருக்கும்,
என்றுமே மறக்க முடியாத உன் நினைவுகளோடு…..

எழுதியவர் : Subha (28-Jan-15, 2:55 pm)
பார்வை : 6234

மேலே