ஆச்சர்ய நதி -ரகு

அரிதான
வார்த்தைகளுக்காகவே
அமைதிகாத்தது
இன்னும் புலப்படாத
ஒரு கவிதை

கொஞ்சம் வெயில்
கொஞ்சம் மழை
குழைத்தெடுத்த
அரிதான
பிரபஞ்சப் பொழுதாய்

உனதான
அழகின் மொத்தங்கள்
உள்வாங்கிப் பிரதிபலிக்க

அறிதானக்
கவிதையொன்று
அவசியமானதை
புரிந்த வண்ணம்
நீள் பயணத்தில்
நிறுத்தியிருந்தேன்
என் கற்பனையை

மண்ஏந்திய நிலவோ
மென்காற்றோ
மலர் கொய்தப்பூவோ
மெல்லிசையோ

மழை நீரில்
பிஞ்சுக்கைகள்
தவழவிட்டக்
காகிதக் கப்பலாகவே
பயணித்தது
என் கற்பனை

என்ன நினைந்து
எப்பொழுது சேர்ப்பேன்
என் எழுதுகோலுக்கான
இயக்கத்தை

இன்னொரு
பிரபஞ்சமாய்
நீ உலவுவதையா
ஆச்சர்ய நதியாகி
என்னறிவில்
சூழ்வதையா
ஆவியாகும்
உன்நினைவுகளால்
என்முகில்
நிறைவதையா

இப்படியான
'யா"க்களின் தேடலில்
தீர்ந்து போயிருந்தது
அன்றும்
அதற்குப் பிறகான
இரவுகளும்

என்ன தவித்தும்
பொய்களுக்கு மட்டும்
இணங்குவதாய் இல்லை
உன்னை இயற்றும்
ஓர் கவிதை !

எழுதியவர் : அ.ரகு (28-Jan-15, 3:27 pm)
பார்வை : 216

மேலே