காத்திருக்க தொடங்கியது

பிரிந்து வந்த பின்
வந்த பாதையை கூட
திரும்பி பார்க்காதே என
உள் மனது எனக்கு
ஓராயிரம் முறை
கட்டளை இட்டது...
புத்தி சொன்னாலும்
மனது கேட்காமல்
நீ என்னை
விட்டு சென்ற
அதே இடத்தில் இன்னமும்
காத்திருக்க தொடங்கியது...
என் காதல்...
நீ என்னிடம்
திரும்பி வந்து விடுவயென...
-சுபா பிரபு

எழுதியவர் : சுபா பிரபு (13-Oct-17, 5:05 pm)
பார்வை : 103

மேலே