சிறு துளி

சிறு துளி...

நீ விரும்பினாலும்,
நீ விரும்பாவிட்டாலும்,
என் அன்பின் மழையில்
நினைந்து கொண்டு இருக்கிறாய்...
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு நொடியும்
என் அன்பு மழையில்
என் உயிரை உருக்கி
உனக்காக உருகிக்கொண்டிருக்கிறேன்..
நான் கேட்பதெல்லாம்
ஒன்றே ஒன்று தான்...
உன் அன்பின்
பெருமழை வேண்டாம் எனக்கு..
நீ யாரையே ,
உன் அன்பில்
நினைக்க வைக்கையில்..,
ஒரே ஒரு
சிறு துளி தாயேன்...
பெருமழையில் கிடைக்கும்
சிறு சாரலாய்..
உன் அன்பை எனக்கும்....
- சுபா பிரபு.

எழுதியவர் : சுபா பிரபு (13-Oct-17, 5:10 pm)
Tanglish : siru thuli
பார்வை : 93

மேலே