எதிர் நீச்சல்
என்னை சுற்றி
கடலளவு,
எண்ணிலடங்கா
வரைமுறையற்ற
அன்பு சூழ்ந்து இருக்க,
நானே....
ஒரு சிறு குடுவையில்
அடைக்க பட்ட நீராய்,
உன்னை தாண்டி
உன் நினைவுகளை தாண்டி ,
வெளியேற முடியாமல்
உனக்குள் மூழ்கி நீச்சலடித்து,
உன் அன்பில் மட்டுமே
என் மூச்சு காற்றை சுவாசிக்கிறேன் ...
மீன் தொட்டியில் நீந்தும் மீனாய்...
மூச்சற்று போகும் நாளில்..
என் அன்பு கடல்
மொத்தமும் ,
என் குடுவையில் சிறிதளவும் ஒட்டாதுயென உணர்ந்தும்..
எதிர் நீச்சல் போடுகிறேன்...
நம் காலத்தோடு...
- சுபா பிரபு