கண்ணீர் மட்டும் பேசுகிறது

ஆயிரம் முறை ஒத்திகை
பார்த்துவிட்டேன்
என் கண்ணாடியில் ...
என் தாய் மொழி
முழுவதும் அலசி ஆராய்ந்து
என் காதலை சொல்ல
அழகான வார்த்தைகள்
ஓராயிரம் கண்டுவிட்டேன் ...
உன்னுடன் தனிமையில் இருக்கும்போது
ஊர் உலக நடப்பு
அனைத்தும் பகிர்ந்து விட்டேன் ..
ஆனால்
என் காதலை
உன்னிடம் சொல்ல
எத்தனிக்கைலில்
என் சப்த நாடியும் நின்று
பேச வார்த்தைகள் அற்று
என் இதயம் மட்டுமே
அளவுக்கு அதிகமாய் துடிக்கிறது ....
உன்னிடம் சொல்லாத
என் பிரியமான அன்பு ..
வெளிப்படுத்த இயலாத
என் காதலை ,
சொல்ல சொல்லி கொல்கிறது
என் உயிர் ...
ஆனால்
வாய் பேச இயலாத
மழலையாக கண்ணீர்
மட்டும் பேசுகிறது ....

எழுதியவர் : சுபா பிரபு (14-Sep-17, 2:42 pm)
பார்வை : 103

மேலே