இல்லறப் பிதற்றல்

இச்சைதனை இறக்கிவிட இதழெச்சியினை இரவல் கேட்டேன்!
இச்செனும் இனிய சத்தம் இயற்றியதோர் இன்ப முத்தம்!
காதினில் கனிந்த சத்தம் கன்னதிற்கெட்டவில்லை! கண்விழித்தே அறிந்தேன்
சத்தம் கணவனுக்காம்!
முத்தம் கைப்பிள்ளைக்காம்!

எழுதியவர் : சுரேந்திரன் (14-Sep-17, 2:35 pm)
சேர்த்தது : surendran
பார்வை : 47

மேலே