ஜன்னல் சீட்டு ராஜா பாட்டு

அது ஒரு மழைக்காலம்...
ஜன்னல் சீட்டு ராஜா பாட்டு என்றவாறு தொடங்குகிறது என் ரயில் பயணம்..

படிப்படியாக தனிமை எனும் காரிருள் என்னை மூடிக்கொள்கிறது..
உன் நினைவலைகளின் சீற்றம் என் இதயத்தின் சுவரை தாக்குவது போல் உணர்கின்றேன்..

உன் நினைவலையை மனதில் கொண்டவாறு
ஜன்னல் பக்கமாக கண்மூடி சாய்கிறேன்..

பனிமூடிய தண்டவாளத்தில்
என் கவி வாழும் இதயத்தை
இரத்தம் சொட்டச்சொட்ட நீ வெட்டிச்செல்கின்றாய்..

எழுதியவர் : தூயவன் (14-Sep-17, 12:49 pm)
பார்வை : 96

மேலே