தூயவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தூயவன் |
இடம் | : மட்டக்களப்பு |
பிறந்த தேதி | : 18-Nov-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 17 |
உன் கண்கள் பார்த்ததில் இருந்துதான் கவிஞன் ஆகினேன்..
அது ஒரு மழைக்காலம்...
ஜன்னல் சீட்டு ராஜா பாட்டு என்றவாறு தொடங்குகிறது என் ரயில் பயணம்..
படிப்படியாக தனிமை எனும் காரிருள் என்னை மூடிக்கொள்கிறது..
உன் நினைவலைகளின் சீற்றம் என் இதயத்தின் சுவரை தாக்குவது போல் உணர்கின்றேன்..
உன் நினைவலையை மனதில் கொண்டவாறு
ஜன்னல் பக்கமாக கண்மூடி சாய்கிறேன்..
பனிமூடிய தண்டவாளத்தில்
என் கவி வாழும் இதயத்தை
இரத்தம் சொட்டச்சொட்ட நீ வெட்டிச்செல்கின்றாய்..
கவி வடிப்பது பாவம் என்றால் என்னை கவிஞன் ஆக்கிய நீ எத்தகைய பாவி என்பதற்க்கு என்னகத்தே வழியும் கவித்துகள்களே ஒரு தக்க சான்று..
இந்த பாவப்பட்ட கவி வாழ ஒரே ஒரு பார்வை பார்..
தொலைந்த என் முகவரிகள் தேடி முட்கள் கடந்து
முன்னூறாண்டுகள் அலைகின்றேன்..
என் முகவரிகள் உன் முக்கண் பார்வையின் முகப்பில் மூழ்கிக்கிடப்பதை அறியாமல்..
உன் கூந்தல் உதிரும் நீர்
மின்சாரலாய் மழைத்தூறலாய்
என் நெஞ்சில் கீறலாய்...
காதலின் மரணம் தான் ஏழு நிலை என்று பாடிய வைரமுத்தே...
இன்றுவரை மரணம் இன்றி நிலையற்று நிற்க நிந்தன் நிழல்கூட நிலைமாறிபோய்
நிற்க்கும் நிலை கண்டிருப்பின் பாடியிருப்பீரோ...?!
உன் மின்வெட்டு விழிப்பார்வையின் இரவல் ஒளியிலும்..
உன் பூவிதழின் முத்த மழையின்
இரவல் குளிரிலும்..
உன் மலர்ந்த மலையழகு மார்பின் இரவல் வெப்பத்திலும்..
உன் கனிந்த தேன் சிந்தும் குரலின்
இரவல் ஒலியிலும்..
உன் பரந்த கட்டுக்கூந்தல் காட்டின்
இரவல் வாசனையிலும்..
இரவல் வாழ்க்கை வாழும் இவனின் இருதயம் இவள் படைக்க...
இறைவன் படைத்தான் என்றால்
இயற்கை இயல்பிழந்து
இமையம் வெடிக்கும்
இறைவன் இமைகள் துடிக்க..
அன்பே அங்கு எரிவது காட்டுத்தீ அல்ல.
உன் இருவிழியின் கூர்மையும் என் துருப்பிடித்த வன்மையான கல் இதயமும் ஒன்றை ஒண்டு உரசிக்கொண்டு பளிச்சிடும் தீப்பொறியாய்
மூங்கில் காடுகளை சிதைக்கிறது..
நின் சொல் அத்தீயை
எம் முத்தமழை கொண்டு அணைக்க முடியாவிடின்
எம் மற்றமழை கொண்டு அணைப்பது
சகி ❤️