இரவல் இருதயம்

உன் மின்வெட்டு விழிப்பார்வையின் இரவல் ஒளியிலும்..
உன் பூவிதழின் முத்த மழையின்
இரவல் குளிரிலும்..
உன் மலர்ந்த மலையழகு மார்பின் இரவல் வெப்பத்திலும்..
உன் கனிந்த தேன் சிந்தும் குரலின்
இரவல் ஒலியிலும்..
உன் பரந்த கட்டுக்கூந்தல் காட்டின்
இரவல் வாசனையிலும்..

இரவல் வாழ்க்கை வாழும் இவனின் இருதயம் இவள் படைக்க...

இறைவன் படைத்தான் என்றால்
இயற்கை இயல்பிழந்து
இமையம் வெடிக்கும்
இறைவன் இமைகள் துடிக்க..

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 4:55 pm)
பார்வை : 125

மேலே