வரமளிப்பாள் தைமகள்o o சொ சாந்தி
#வரமளிப்பாள் தைமகள்
போட்டெ ரித்தோம்
துன்ப மெலாம்
போகி யிலே சாம்ப லாச்சு
மீட்டெ டுக்க வந்த தையை
பாட்டெ டுத்துப் பாடி டுவோம்..!
பொங்க லிட்டோம் பொங்கு.. தடி
புதுப் பானை மேலெ ழும்பி
போடுங்..கடி குலவைச் சத்தம்
பொண்டு..களே வான மெட்ட..!
கதிர் வெளஞ்சி களம் நெறஞ்சி
கணிசப் பொருள் கண்டு விட்டோம்..
காக்கு மந்தக் கதி ரோனை
கையெ டுத்துக் கும்பி டுவோம்..!
மண் வளர்த்தப் பயிறு பச்சை
மலை போல்கு விஞ்சி ருக்கு
வாழ வைக்கும் தெய்வ மது
வணங்கி டுவோம் மண்ணத் தொட்டு..!
உழுத காளை ஒரு தெய்வம்
ஊர் நனைத்த மழை தெய்வம்
ஒட்டு மொத்த தெய்வத் துக்கு
உள்ளம் பொங்க நன்றி சொல்வோம்..!
வசதி தந்தத் தைம களே
வாழ்வ ளிக்கும் தைம களே
வரம் கேட்க ஏது மில்ல
வணங்கு கிறோம் வாழ்த்தி யருள்..!
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..!
#சொ.சாந்தி