காதல் என்பது வரமா சாபமா
கைபிடித்து உடன் நடக்கும்வரை,
கையேடு உடன் செலுத்தும்போதும்,
காதல் வரம்!
உற்றார் உறவினர் முன்னிலையில்
உற்றவனுடன் நிற்கும்போது
காதல் சாபம்!
காதலன் சிரிக்கும்வரை,
கணவனாக மாறும்வரை
காதல் வரம்!
கணவனாய் கோபப்படும்போது,
கைநீட்டி அடிக்கும்போது,
காதல் சாபம்!
மழலை செல்வம் பேசி
மாலை பொழுது கழிந்தால்,
காதல் வரம்!
மற்றவர்கள் பேசி
மாலை பொழுது கழிந்தால்,
காதல் சாபம்!
கணவன் மனைவியை
நேசிக்கும் வரை,
காதல் வரம்!
அதே கணவன்
தன்னை பிரிந்தால்
காதல் சாபம்!
காதல் மட்டும்
உனக்குள் இருந்தால்
காதல் வரம்!
அது காதலில்லை
காமம் என தெரிந்தால்
காதல் சாபம்!
வாரமும், சாபமும்
காதலில் இல்லை!
காதல் செய்பவர்களிடம்தான்
இருக்கிறது!
உன்னருகே நான் இருந்தால்
என கவிதைகள் தோன்றும்,
காதலிக்கும் வேளையில்!
என்னருகே நீ இருந்தால்
பல கலவரங்கள் தோன்றும்
காதலில்லா வேளையில்!
காதல் வரமா? சாபமா?
அறிந்தோர் யாருமில்லை,
அறியவைக்கவும் யாருமில்லை,
புரிந்து கொண்டால்தான்
புது புது அர்த்தங்கள் தோன்றும்!!
எல்லாமே மானுடம் வளர்க்கும்
மந்திர சொல்லில்தான்!!!!