அடுத்த ஜென்மம் எதற்கு
இனி இழக்க எதுவும் இல்லை..
உனக்கும் எனக்கும்....
இன்னமும் கொஞ்சம்
மிஞ்சம் எஞ்சி இருக்கும்
கண்ணீரும்.....
உயிர் இருக்கும் வரை
நம் நினைவுகள் மட்டுமே...
இது போதும்....
இன்னும் கடவுள் கொடுக்கும்
நாட்களை கடந்துவிட....
அடுத்த ஜென்மம் எல்லாம்
நம்பிக்கையில்லை எனக்கு..
இதே என் எதிரே இருக்கும்
உன்னுடன் எனக்கு
யாராலும் அளவிட
முடியாத காதல் இருந்தும்....
அதை என் கண்ணீரில் மறைத்து
இப்போது எந்த நட்பும்,
துளி உறவும் இல்லையெனில்
நிலை இல்லாத,
நிச்சயம் இல்லாத
அடுத்த ஜென்மம் எதற்கு...
நாமும் நம் காதலும் வாழ்வதற்கு....
சுபா பிரபு