போதுமானதாக இல்லை
போதும் என்ற மனமே
பொன் செய்யும் மனமாம்..
ஆனால்
நீ எவ்வளவு
வாரி வழங்கினாலும்
உன் அன்பும்
உன் காதலும்
எனக்கு ஒருபோதும்
போதுமானதாக இருந்தது இல்லை
இன்று வரை...
உன் அன்பு கடலில்
நான் மூழ்கி
மூச்சடைத்து துடித்தாலும்
போதாதது
எனக்கு இவ்வுலகில்
உன் அன்பு மட்டும்தான்...
சுபா பிரபு