எளிநன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : எளிநன் |
இடம் | : பெங்களூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 288 |
புள்ளி | : 21 |
சற்று நீயென்னை
உற்று பார்த்திட
முற்றும் மறந்து நான்
அற்று போகிறேன்
"சரிதானா?" என்று யார் கேட்கும் போதும்
உன் மீதான என் காதல் சரிதானா என்று திக்கித்தவித்த ஞாபகங்கள்
நொடிகள், நிமிடங்கள், நாட்கள்,
வாரங்கள், மாதங்கள், வருடங்கள்
என நான் சுமந்த காதல் பொன்மூட்டை
உன் பார்வையில் வெறும் பொதிமூட்டை
சொன்னால் பிழையாகுமோ
சொல்லாமல் வலி கூடுமோ
காதலன் ஆகிட முயன்று
நண்பனெனும் உறவினை இழக்க நேரிடுமோ
என்ற அச்சங்களின் ஊஞ்சலாட்டத்தில்
உன் பக்கம் நிற்கும் வாஞ்சை ஏக்கத்தில்
பின்னல் போல உன் பின்னே திரிந்தேன்
ரிப்பன் போல நானும் வளைந்தேன்
பொட்டு வைத்த நெற்றியின் கீழே
புருவமாகும் ஆசைகள் கொண்டேன்
தொட்டு பேச வாய்ப்புகள் இருந்தும்
எட்டி நின்று வாயசைவினை
காலக்குதிரையின் முதுகினிலே
சாவாரி செய்யும் குரங்குகள் நாம்
காலக்குரங்கின் கைகளிலே
பதுங்கி கிடைக்கும் கனிகள் நாம்
காலக்கனிகளின் காம்பினிலே
மொய்க்க தவிக்கும் ஈக்கள் நாம்
கால ஈக்களின் கால்களிலே
தொற்றித்திரியும் கிருமிகள் நாம்
காலகிருமியின் கருவினிலே
தோன்றி பரவிடும் நோயும் நாம்
நோயுண்டோம்
மாய்கின்றோம்
மாந்தரினம்
தேய்கின்றோம்
காலக்குதிரையின் முதுகினிலே
சாவாரி செய்யும் குரங்குகள் நாம்
காலக்குரங்கின் கைகளிலே
பதுங்கி கிடைக்கும் கனிகள் நாம்
காலக்கனிகளின் காம்பினிலே
மொய்க்க தவிக்கும் ஈக்கள் நாம்
கால ஈக்களின் கால்களிலே
தொற்றித்திரியும் கிருமிகள் நாம்
காலகிருமியின் கருவினிலே
தோன்றி பரவிடும் நோயும் நாம்
நோயுண்டோம்
மாய்கின்றோம்
மாந்தரினம்
தேய்கின்றோம்
அவன் சில விரல் தூரம் போனதுமே
அவள் சலங்கையில் மீண்டும் ஈர்ப்பது போல்
ஜன்னலை அடைந்திட முற்படுமுன்
பொழிமழை அழைத்தது வீரியமாய்
அவள் அறை கதவினில் இவன் விரல்கள்
புது ஒரு தாளம் அமைப்பதுபோல்
அடைக்கதவின் மீதினிலே
மழை கரங்கள் மோதிடுதே
காலை எழுந்ததும்
காதல் நினைவுகள்
காலக்கழிவுகளாய்;
மாலை மயங்கிட
மனமும் ஏங்கிட
காதல் மதுகலனாய்!
முற்றுப்புள்ளி மீண்டும்
தொடர்கிறதே
மூர்ச்சையுற்ற மனமும்
மலர்கிறதே
விடுமுறை எடுத்து போன புன்னகை
இன்றே வாசல் திரும்பியது
மறுமுறை பார்ப்பேன் என்று எண்ணையில்
சற்றே என் நரை மறைகிறது
தோள் சேர்ந்து
மேல் சாய்ந்து
வாழ்ந்தந்த நாள்
நினைவு உன்னிலும் இருக்குமோ
நாம் பதித்த
கால் தடத்தை நீர் மறைத்ததால்
அழிந்த ஞாபகம் மறக்குமோ
உன் வளையோசை அதை கேட்க
என் பலதூர பயணம்
- தொடரும். உன் கலைக்கூந்தல் தரும் வாசம்
என் இருநாசி நிறையும்
விளையாடிப்போன வீதிகள் வழியே
தலையாட்டும் பூக்களை பார்த்தேன்
கண்ஜாடை அசைவினில் நீயதை
சூடச்சொன்னதை
"சரிதானா?" என்று யார் கேட்கும் போதும்
உன் மீதான என் காதல் சரிதானா என்று திக்கித்தவித்த ஞாபகங்கள்
நொடிகள், நிமிடங்கள், நாட்கள்,
வாரங்கள், மாதங்கள், வருடங்கள்
என நான் சுமந்த காதல் பொன்மூட்டை
உன் பார்வையில் வெறும் பொதிமூட்டை
சொன்னால் பிழையாகுமோ
சொல்லாமல் வலி கூடுமோ
காதலன் ஆகிட முயன்று
நண்பனெனும் உறவினை இழக்க நேரிடுமோ
என்ற அச்சங்களின் ஊஞ்சலாட்டத்தில்
உன் பக்கம் நிற்கும் வாஞ்சை ஏக்கத்தில்
பின்னல் போல உன் பின்னே திரிந்தேன்
ரிப்பன் போல நானும் வளைந்தேன்
பொட்டு வைத்த நெற்றியின் கீழே
புருவமாகும் ஆசைகள் கொண்டேன்
தொட்டு பேச வாய்ப்புகள் இருந்தும்
எட்டி நின்று வாயசைவினை
மலர் வண்ண இதழ்கள் மேலே,
மகரந்தம் மிளிர்கிறதே;
கவின் மலர் இதழினும் மெல்லிய
இதழ்கள் என தோன்றிடுதே.
கருவண்ணம் பொருமுதடி,
உன் கூந்தல் பார்க்கையிலே;
மலையருவி நாணிடுதே
உன் கூந்தல் வலைவினிலே.
பொன் வண்ண கன்னம் உடையவளே ,
உன் கண் வண்ணம் என்னதடி?
இமைக்காமல் நீயும் பார்க்காதே
வெண்ணிலாவும் சின்னதடி.
உள்ளதை மட்டும் சொன்னாலே,
நான் கம்பன் ஆவேனே,
கண்களை பார்த்து சம்மதம் சொல் ,
உன் கணவன் ஆவேனே;
உன் பாதம் தரைமேல் படர்கையில்
பளிங்காய் மாறிடும் ஈரநிலம் ,
நீ நடக்கும் ஓசை கேட்கையில்
புதிதாய் எழுந்திடும் ஏழு ஸ்வரம்.
முற்றுப்புள்ளி மீண்டும்
தொடர்கிறதே
மூர்ச்சையுற்ற மனமும்
மலர்கிறதே
விடுமுறை எடுத்து போன புன்னகை
இன்றே வாசல் திரும்பியது
மறுமுறை பார்ப்பேன் என்று எண்ணையில்
சற்றே என் நரை மறைகிறது
தோள் சேர்ந்து
மேல் சாய்ந்து
வாழ்ந்தந்த நாள்
நினைவு உன்னிலும் இருக்குமோ
நாம் பதித்த
கால் தடத்தை நீர் மறைத்ததால்
அழிந்த ஞாபகம் மறக்குமோ
உன் வளையோசை அதை கேட்க
என் பலதூர பயணம்
- தொடரும். உன் கலைக்கூந்தல் தரும் வாசம்
என் இருநாசி நிறையும்
விளையாடிப்போன வீதிகள் வழியே
தலையாட்டும் பூக்களை பார்த்தேன்
கண்ஜாடை அசைவினில் நீயதை
சூடச்சொன்னதை
காதலை தூதுரைக்கும் பூவே
உனக்கோ காதலிக்க நேரமில்லை.
காதலை கவிபாடும் என்னை
இங்கே காதலிக்க யாருமில்லை.