மீண்டும் சந்திப்பு

முற்றுப்புள்ளி மீண்டும்
தொடர்கிறதே
மூர்ச்சையுற்ற மனமும்
மலர்கிறதே

விடுமுறை எடுத்து போன புன்னகை
இன்றே வாசல் திரும்பியது

மறுமுறை பார்ப்பேன் என்று எண்ணையில்
சற்றே என் நரை மறைகிறது

தோள் சேர்ந்து
மேல் சாய்ந்து
வாழ்ந்தந்த நாள்
நினைவு உன்னிலும் இருக்குமோ

நாம் பதித்த
கால் தடத்தை நீர் மறைத்ததால்
அழிந்த ஞாபகம் மறக்குமோ

உன் வளையோசை அதை கேட்க
என் பலதூர பயணம்
- தொடரும். உன் கலைக்கூந்தல் தரும் வாசம்
என் இருநாசி நிறையும்

விளையாடிப்போன வீதிகள் வழியே
தலையாட்டும் பூக்களை பார்த்தேன்
கண்ஜாடை அசைவினில் நீயதை
சூடச்சொன்னதை நினைத்தேன்

உன் ஆள்காட்டி விரல்
என் இதழ் இடையினில்
இறுகிய பொழுதினில்
உருகியது

நம் தன்னந்தனிமையின்
வண்ண நினைவுகள்
நித்தம் மனதினில்
பெருகியது

எழுதியவர் : எளிநன் (19-Aug-17, 3:03 pm)
Tanglish : meendum santhippu
பார்வை : 369

மேலே