kejuvakeats - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kejuvakeats
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Sep-2017
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  4

என் படைப்புகள்
kejuvakeats செய்திகள்
kejuvakeats - எளிநன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2017 2:52 pm

"சரிதானா?" என்று யார் கேட்கும் போதும்
உன் மீதான என் காதல் சரிதானா என்று திக்கித்தவித்த ஞாபகங்கள்
நொடிகள், நிமிடங்கள், நாட்கள்,
வாரங்கள், மாதங்கள், வருடங்கள்
என நான் சுமந்த காதல் பொன்மூட்டை
உன் பார்வையில் வெறும் பொதிமூட்டை
சொன்னால் பிழையாகுமோ
சொல்லாமல் வலி கூடுமோ
காதலன் ஆகிட முயன்று
நண்பனெனும் உறவினை இழக்க நேரிடுமோ
என்ற அச்சங்களின் ஊஞ்சலாட்டத்தில்
உன் பக்கம் நிற்கும் வாஞ்சை ஏக்கத்தில்
பின்னல் போல உன் பின்னே திரிந்தேன்
ரிப்பன் போல நானும் வளைந்தேன்
பொட்டு வைத்த நெற்றியின் கீழே
புருவமாகும் ஆசைகள் கொண்டேன்
தொட்டு பேச வாய்ப்புகள் இருந்தும்
எட்டி நின்று வாயசைவினை

மேலும்

நன்றி :D :D 05-Sep-2017 3:18 pm
Super ✌👍👏 05-Sep-2017 3:15 pm
kejuvakeats - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 3:09 pm

தள்ளுவண்டியில்,
ஊர்வலமாய்,
மதஒற்றுமையை பரப்புகிறான்,
கடவுள் படங்கள் விற்கும் வியாபாரி.

மேலும்

kejuvakeats - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 3:00 pm

நர்மதாவிற்கு ,
அது தான் முதல் முறை,
அவ்வளவு பக்கத்தில் ,
அதை பார்ப்பது !

அருகில் சென்று,
ஆசையார ஒரு முறை தொட்டுப் பார்க்க ,
அகம் ஏங்கியது !


அருகில் செல்வதற்குள்,
அவசரமாய் அந்த கோயிலிருந்து வெளியே வந்த,
ஐ -போன் சிறிமி,
அதை காலில் நுழைத்து சென்றுவிட்டாள்.

அழுக்கு தேகத்தில்,
அங்கங்கே அம்மா வாங்கி வர சொன்ன,
அரை டம்ளர் பால் தெறிததை,
கவணிக்காதவளாய்,
அந்த செருப்புகளையே எட்டாகனி போல் பார்த்துக் கொண்டிருந்தாள்,
எட்டிப்பிடிக்கும் தூரத்திலிருந்து மறையும் வரை.

சாக்கடை சுத்தம் செய்யும் அப்பா,
சாக்கு போக்கு பல சொல்லியிருக்கிறார்,
செருப்பு வாங்கி தர இயலாமைக்கு.

விளங்காத கால்

மேலும்

kejuvakeats - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 2:44 pm

தேன்மொழி,
தன்னிடம் தாராளமாய்,
இருக்கும் ஒன்றை,
விற்பவள்.

தனது தொழிலுக்கு,
தன்னையே முதலீடாக ,
தானம் செய்தவள்.

இனிமை மறந்து,
இம்சையோடு குடும்பம் நடத்திய இவள் நாட்கள்,
வாழ்வின் முற்றுபுள்ளியை
நோக்கி ஓடியது,
இவள் தண்டவாளத்தை நோக்கி ஓடியதால்...

சந்தித்ததேன்,
அந்த தமிழ்மகளை,
தண்டவாளத்தில் !!!

அவள் கலைந்த முகம் ,
அவள் உருகுலைந்த வாழ்வை,
அரை நொடியிலேயே தெரிவித்தது.

காரணம் கேட்க நாவெழாமல்,
காபி வாங்கி தந்து,
அமர வைத்தேன்,
ஓர் ஆலமரத்தடியில்.

சேலையை தொடர்ந்து நனைத்த அவள் கண்கள்,
மழை தூரலை நினைவுப்படுதியது.

சீ!!இந்த உவமைகளுக்கு நேரம் காலம் தெரிவதில்லை.

உவமை வளத்

மேலும்

kejuvakeats - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 2:34 pm

அன்புள்ள அப்பாவிற்கு.......

அன்புள்ள அப்பாவிற்கு ..
கொள்ளி வைக்க கூட
கொடுத்து வைக்காத மகள் எழுதும் கடிதம்.

வரமாய் வந்த நீங்கள் வரலாறானதை கொஞ்சமும் வரவேற்காத உங்கள் மகள், எழுதும் முகவரியில்லா கடிதம்.

தூணாய் இருந்த நீங்கள் ,
தூரமாய் சென்ற அந்த ஒரு நாளை வெறுக்கும் மகள் !
ஒரு நாளின் அதிவேக அபூர்வ சக்தியை புரிந்து கொண்ட மகள் !

அப்பா !!!
தள்ளாத வயதிலும்,
தொலைந்து போன உங்களை ,
இன்னும் தொலையாத பல பொருட்களில் பார்க்கிறேன் !!!!

முகம் கழுவுகையில் ,
முகமுழுக்க உள்ள முத்தங்களின் தடங்களில்,
நான் முத்துக்குளிக்கின்றேன்!!

எட்டடி நடந்தாலும் ,
எட்டாயிரம் அடி நடந்தாலும் ,
என் கைப்ப

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே