Anbulla Appavirku

அன்புள்ள அப்பாவிற்கு.......

அன்புள்ள அப்பாவிற்கு ..
கொள்ளி வைக்க கூட
கொடுத்து வைக்காத மகள் எழுதும் கடிதம்.

வரமாய் வந்த நீங்கள் வரலாறானதை கொஞ்சமும் வரவேற்காத உங்கள் மகள், எழுதும் முகவரியில்லா கடிதம்.

தூணாய் இருந்த நீங்கள் ,
தூரமாய் சென்ற அந்த ஒரு நாளை வெறுக்கும் மகள் !
ஒரு நாளின் அதிவேக அபூர்வ சக்தியை புரிந்து கொண்ட மகள் !

அப்பா !!!
தள்ளாத வயதிலும்,
தொலைந்து போன உங்களை ,
இன்னும் தொலையாத பல பொருட்களில் பார்க்கிறேன் !!!!

முகம் கழுவுகையில் ,
முகமுழுக்க உள்ள முத்தங்களின் தடங்களில்,
நான் முத்துக்குளிக்கின்றேன்!!

எட்டடி நடந்தாலும் ,
எட்டாயிரம் அடி நடந்தாலும் ,
என் கைப்பிடித்து என்னுடன் நீங்கள் நடந்த நினைவுகள் வந்து இமைகளை ஈரமாக்குகின்றன!

அயர்ந்து தூங்க ,
ஆயிரம் முறை முயன்றாலும்,
உங்கள் உருக்கமான கதைகளை,
எதிர்ப்பார்க்கும் என் செவிகள்,
என்னை உறங்கவிடுவதில்லை.


உங்கள் நினைவுகள் உள்ளத்தில் உந்துகையில்,
உங்கள் சட்டை தலையணையாகவும்,
உங்கள் வேட்டி போர்வையாகவும் மாறுவேடம் பெயர்ந்துக்கொள்கிறது!

இப்படி...
காலங்கள் பல ஓடியும் ,
உங்கள் நினைவுகள் ,
இன்னும் ஓடாமல் ,
இதயத்தின் இதமான ஒரு ஓரத்தில் அமர்ந்து ,
இன்றைக்கும் ஆறுதல் சொல்லுதப்பா !

அதனால் வாழ்கிறேன் !

எழுதியவர் : kejuvakeats (5-Sep-17, 2:34 pm)
சேர்த்தது : kejuvakeats
பார்வை : 403

மேலே