கல்வி

கல்வி இந்த பிரபஞ்ச வனத்தின்
இன்ப பூக்கள்,
பள்ளி நாட்கள் திறமை நாட்டியத்தின்
நட்டுவானார்,
வகுப்பறையின் உள்ளே புத்தகத்தின் அருகே
உருவாகி சுழலும் உள்ளத்தின் முத்திரைகள்.
ஆத்மாவின் பூவில் அள்ளி வைத்த
தேனை உப்பென்று துப்பும் கல்லூரி காலங்கள்,
மண்மேல் மனிதன் முதல்முதலில்
வெற்றி நடை போட
பாதை சொல்லி தந்த
பாலா தீபம் கல்வி,
வாழ்வின் இருட்டை கிழிப்பதற்கு
படைத்தவனே ஏற்றி வைத்த கல்வி விளக்கு
இன்பம் தேடி மனப்பறவை
என்றோ திறந்து வைத்த கல்வி சாலைகள்
வாழ்க்கை விளக்கின் ஒளி சுடர்கள்,............

எழுதியவர் : ஸ்ரீஜே (5-Sep-17, 3:54 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : kalvi
பார்வை : 3061

மேலே