ஆசிரியர் என்னும் அறக்கடவுள்கள்
மாதா, பிதா, குரு, தெய்வம்
என்பது பழமொழி,
மூன்றாமிடத்தில் இருந்த குருவை
முன்னுக்கு தள்ளிவிட்டு,
முன் விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறோம் ,
அ தொடங்கி ஃ வரை ,
அகரம் தொடங்கி சிகரம் வரை
அனைத்தையும் புரியவும் புரிந்து கொள்ளவும் வைத்து
எவ்வித பந்தமும் இன்றி நமக்காய் உழைத்து
சாதனைகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கி,
ஊட்டுவதில், நமக்கு அன்பையும்
அறிவையும் ஊட்டுவதில் தாயாய்,
கண்டிப்பதில், நம் தவற்றை
சுட்டிக்காட்டி கண்டிப்பதில் தந்தையாய் ,
உணர்வுகளில் தோழனாய் தோழியாய்,
நம் மத்தியில் நடமாடி,
இறுதி வகுப்பு நிறைவு பெறும்போது ,
இன்னும் சிறிது காலம் நீளக்கூடாதா
இந்த பந்தம் என சிந்திக்க வைத்து ,
சரித்திரத்தை படிக்கவும்,
நாளைய சரித்திரத்தை படைக்கவும்,
ஊன்றுகோலாய், தூண்டுகோலாய், திகழ்பவர்களே
ஆசிரியர்கள் என்னும் அறக்கடவுள்கள்.