Thanda vaalathil nan kanda tamizhmagal
தேன்மொழி,
தன்னிடம் தாராளமாய்,
இருக்கும் ஒன்றை,
விற்பவள்.
தனது தொழிலுக்கு,
தன்னையே முதலீடாக ,
தானம் செய்தவள்.
இனிமை மறந்து,
இம்சையோடு குடும்பம் நடத்திய இவள் நாட்கள்,
வாழ்வின் முற்றுபுள்ளியை
நோக்கி ஓடியது,
இவள் தண்டவாளத்தை நோக்கி ஓடியதால்...
சந்தித்ததேன்,
அந்த தமிழ்மகளை,
தண்டவாளத்தில் !!!
அவள் கலைந்த முகம் ,
அவள் உருகுலைந்த வாழ்வை,
அரை நொடியிலேயே தெரிவித்தது.
காரணம் கேட்க நாவெழாமல்,
காபி வாங்கி தந்து,
அமர வைத்தேன்,
ஓர் ஆலமரத்தடியில்.
சேலையை தொடர்ந்து நனைத்த அவள் கண்கள்,
மழை தூரலை நினைவுப்படுதியது.
சீ!!இந்த உவமைகளுக்கு நேரம் காலம் தெரிவதில்லை.
உவமை வளத்தை,
ஊமை ஆக்கிவிட்டு,
'ஏன் பிள்ளாய்,மாய பார்த்தாய் ' கேட்டேன்.
'உயிருடன் சாவதை விட,
சாவதே மேல் '
தேம்பிக் கொண்டே சொன்னாலும்,
தெளிவாய் இருந்தது,
அவள் பதில்.
'தற்கொலை தவறு பிள்ளாய் 'என்றேன் சற்றே தயக்கத்துடன்.
'என் தொழிலை விட எதும் தவறில்லை'என்றாள் ,
உடைந்த குரலில்.
தன் தவறெண்ணி,
தன்னை திருத்த,
வழியின்றி,
வழிமாறி வந்த அவள்
வணக்கங்பட வேண்டியவளாக தோன்றினாள்.
'வேலை வாங்கி தரேன் ,வருகிராயா ?'கேட்டேன்.
சலிப்பாய் அவள் சொன்ன பதிலால்,
சரிந்தது என் மனம்,
'என்னிடம் இதே கேள்வியை கேட்டு தான் இப்படி ஒரு வேலையில் சேர்த்தாள் ,உம்மை போல் ஒரு பெண் '
என் உதவியை,
உதறிவிட்டு,
நக்கலாய் சிரித்து ,
நகர்ந்தாள்,
நகராமல்,
உரைந்து போன,
என்னை ,
கடந்து.
அவள் முனுமுனுத்த கடைசி வார்த்தைகள்
'நாதியத்து போன பின்பும்,
நரபலிக்கு ஆள் சேர்க்கிறது,மானுட கூட்டம் .....'
மாய்ந்து போன,
அவளின் மனிதர்கள் குறித்த நம்பிக்கை,
உயிருடன் மாய்த்தது என்னை ஒரு முறை !!
அன்று இருட்டில் மறைந்த போன அவளை,
இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன்,
வஞ்சகத்திற்கு இரையாகாமல் மிச்சம் இருக்கும் நல்ல மனிதர்கள்
பற்றி பேசுவதற்காக....
தேன்மொழி ,
அவள்,
கிடைத்தபாடில்லை.