பெண்ணின் நேசம் உண்மையில் யார் மேலே

இளங்காற்றும் மயங்கும் இலையுதிர் காலத்தின் தொடக்கம்,
மெல்லிய கதிரவனின் தீண்டலும் நடு நேர வெயிலும்கும் மத்தியில்,
உன் வீட்டின் உள் அறையில், தேன் தமிழ் புத்தகம் ஒன்றின் வழி சொன்னாய் உன் காதலை,
அறியா பருவம் அதில் உன் அன்பை மனதில் ஏற்று, அடுத்த ஒரு மாதத்தில் கல்லூரியில் நுழைந்தேன்,
கணிப்பொறி பொறியியல் படிப்பில் உன் கண்களின் அழகில் கவிதை படித்தேன்,
மாமன் மகன் நீ...கல்லுரி காதல் என்ற வார்த்தையை பொய் ஆக்கினாய்,
உன் காதலுடன் நட்பின் ஸ்பரிசம் தீண்டியது,
பெண்ணிற்கும் பெண்ணிற்கும் இடையில் வார்த்தை பகிர்வின் நட்பு,
பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையில் நல்ல பண்பு பகிர்வின் நட்பு,
என கண்டுகொண்டான் கல்லுரியின் சுவர்களில்,
கண்களிலின் காதலும், கைகைளின் நட்பும் இனிமை இனிமை,
காதலன் பார்வை புதிது,
காதலன் வார்த்தை இனிது,
காதலன் மேலே பட்ட காற்று சுவாசமானது,
காதலன் ஆடைகள் விலைமதிப்பற்றது- இதைபோல்
நான் தான் அவனின் வாழ்கை,
நான் தான் அவனின் மூச்சி,
நான் தான் அவனின் நினைவு,
நான் தான் அவனின் நிழல்,
நான் தான் அவனின் ஆசை,
நான் தான் அவனின் உயிர்,
இவை அனைத்தும் என்னாலே என தோன்றியது- அனால் அப்பா,
என்று உன்னை பிரிந்து காதலன் கை பிடித்தினோ
அன்று உண்மைகள் உணர்ந்தேன்...... எல்லாம் உன்னால் என்று,
உன் மகளாய் அவனை ரசித்த கண்கள்-இன்று,
உன்னை காண ஏங்குகிறது அப்பா,
உன் மகளாய் அவனை நேசித்த இதயம்-இன்று,
உன் நினைவில் அனைத்தையும் வெறுக்கிறது அப்பா,
கல்லுரியின் மாணவியாய் படித்ததும்,
நண்பனின் தோழியாய் சிரித்தததும்,
காதலன் கனவாய் சுற்றியதும்,
உன் மகளாய் நான் கண்ட வானவில் நிறங்கள் மட்டுமே,
என் வானம் என்றும் என்னை பெற்ற நீ மட்டும் தான் அப்பா...
சிப்பிக்குள் அடங்கும் நீர் துளிதான் முத்தாய் மாறி விலை பெறும்,
தந்தைக்கு அடங்கும் பெண்ணுக்கு தான் சமூதாயத்தில் மதிப்பு உண்டு,
தாமதமாய் தெரிந்தாலும் தந்தை மட்டுமே ஒரு பெண்ணின் நேசத்திற்கு சொந்தமானவர் என்றுமே அவளின் அப்பா மட்டுமே...

எழுதியவர் : தமிழ் அரசி (5-Sep-17, 10:10 am)
சேர்த்தது : tamil arasi
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே