துரோகிகளே தூர் வாருவோம்
மானமுள்ள மறவர் இனம்
மாசடைந்து விட்டதடா...
மண்டியிடும் உன் குணத்தை
மனம் ஏற்க மறுக்குதடா...
காலில் விழுந்து வணங்கியே
காக்கா பிடித்தது நீயடா...
காலம் தானே புரியவைத்தது-நீ
காவி கூட்டத்தின் நாயடா...
பாதுகாத்த தெய்வத்திற்கு
பாவ பலியே கொடுத்தாயடா...
பணம் பதவி ஆசைக்காக
பச்சோந்தியாக நடித்தாயடா...
விசுவாசம் என்ற சொல்லை
விளையாட்டாக நினைத்தாயடா...
விதை போட்ட மரத்திற்கே
வினை செய்ய பார்த்தாயடா...
பாதை மாறிய பகடையே-உன்
பகல் கனவு பழிக்காது
உன்னை போன்றவரே கலையெடுக்க
உன்மை தொண்டன் நானுண்டு...
தலைவன் என்றும் ஒருவன்தான்
தருதலைகள் புரிந்துகொள்ளட்டும்
இலையே முடக்கிய எச்சைகளின்
இச்சை செயலை உலகறியும்...
துரோகிகளே தூர் வாரும்
துள்ளியமான நாள் வரும்
தூசுகளே துடைத்துவிட்டு
தூய ஆட்சி மீண்டும் துளிரும்...
தூசுகளே துடைத்துவிட்டு
தூய ஆட்சி மீண்டும் துளிரும்....