மறைக்கப்பட்ட ஓவியம்
மலர் வண்ண இதழ்கள் மேலே,
மகரந்தம் மிளிர்கிறதே;
கவின் மலர் இதழினும் மெல்லிய
இதழ்கள் என தோன்றிடுதே.
கருவண்ணம் பொருமுதடி,
உன் கூந்தல் பார்க்கையிலே;
மலையருவி நாணிடுதே
உன் கூந்தல் வலைவினிலே.
பொன் வண்ண கன்னம் உடையவளே ,
உன் கண் வண்ணம் என்னதடி?
இமைக்காமல் நீயும் பார்க்காதே
வெண்ணிலாவும் சின்னதடி.
உள்ளதை மட்டும் சொன்னாலே,
நான் கம்பன் ஆவேனே,
கண்களை பார்த்து சம்மதம் சொல் ,
உன் கணவன் ஆவேனே;
உன் பாதம் தரைமேல் படர்கையில்
பளிங்காய் மாறிடும் ஈரநிலம் ,
நீ நடக்கும் ஓசை கேட்கையில்
புதிதாய் எழுந்திடும் ஏழு ஸ்வரம்.