காலம் ஜாக்கிரதை

காலக்குதிரையின் முதுகினிலே
சாவாரி செய்யும் குரங்குகள் நாம்
காலக்குரங்கின் கைகளிலே
பதுங்கி கிடைக்கும் கனிகள் நாம்
காலக்கனிகளின் காம்பினிலே
மொய்க்க தவிக்கும் ஈக்கள் நாம்
கால ஈக்களின் கால்களிலே
தொற்றித்திரியும் கிருமிகள் நாம்
காலகிருமியின் கருவினிலே
தோன்றி பரவிடும் நோயும் நாம்

நோயுண்டோம்
மாய்கின்றோம்
மாந்தரினம்
தேய்கின்றோம்

எழுதியவர் : (4-Oct-17, 3:01 pm)
பார்வை : 592

மேலே