என்ன சுகம் கண்டேனோ

என்ன சுகம் கண்டேனோ
வஞ்சி உனை நானிழந்து
வசந்தம் வீசும் நெஞ்சினிலே
வாசமின்றி போனதடி
முத்தம் தேடும் கன்னத்திலே
வைகை ஆறு பாயுதடி

நான் பாடும் பாடலிலே மாமரத்து பூங்குயிலும் சோககீதம் சொல்லுதடி

உன்மேலே ஆசைவைத்தும்
ஆலையான என் மனசை
உலையாக்கி போனவளே

வாசமில்லா மலரதுவும் வாடிவதங்கி போவது போல்
நீ இல்லா என் மனமும்
வாடிவதங்கி போகுதடி

நான் பாடும் பாடலுமே
ஒருதலை ராகம் தானடி
நிழல் தேடும் என் நெஞ்சினிலும்
ஒருதலை காதலடி

எழுதியவர் : செல்வம் (19-Aug-17, 11:29 am)
பார்வை : 500

சிறந்த கவிதைகள்

மேலே