சூர்யா மா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சூர்யா மா |
இடம் | : பரங்கிப்பேட்டை,சிங்கை |
பிறந்த தேதி | : 02-Apr-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 1075 |
புள்ளி | : 87 |
கபிலர் கைவரப் பெற்ற தமிழை
கடுகலாவது கற்றிட ஆவல்.......ழ்
ஒவ்வொரு கல்லாக
சேகரித்து பாத்திரத்தை
நிரப்பி தண்ணீரை
பருகிய காக்கைக்குதான் தெரியும் அது பேராசை
இல்லை என்று.
வீடு போம்
உறவு போம்
கற்றது போம்
பெற்றது போம்
உற்றது போம்
காடு போம்
உயிரும் போம்
எல்லாம் போம்
உன்னை விட்டு
போகாத ஒன்று.
காரணம் இருந்தும்
காதலை சொல்ல
மறுக்கிறேன்
உன்னிடத்தில்.
நீண்டகாலம் என்னோடு
பயணித்தவள் நிறை
குறை யெல்லாம்
அறிந்தவள் நீ.
கொற்றவையின் பலியாடாய்
உன்னையும் என்னையும்
பேசி களித்தார்கள்
நண்பர்கள் கூட்டம்.
மென்மையான உன்
குணத்தை இந்த
மிருகத்தின் கடிவாளமாய்
உணருகிறது நெஞ்சம்.
விழியோ தடம்
புரளவில்லை உன்னை
நோக்கியே அனுதினமும்
நடை போடுகிறது.
நீ உணரும் தருணம்
இம்மை முடிந்தும்
மறுமை காலமும்
காத்திருக்கும் என்
💓💓💓 ம்.........
தொலைவில் இருந்தாலும் அருகில் இருப்பாய் என்று சொன்னாய் ஆனால் நீயோ தொலைதூரம் சென்றுவிட்டாய்..... நானோ நீ விட்டு சென்ற இடத்தில் உன் நினைவுலுடன்.......
எண்ணம் முழுதும் அவளின் நினைவில்
இளமை பூக்குதே !
கண்ட வுடனே கவிதை யூற்று
கனிந்து பொங்குதே !
கண்கள் தொடுத்த கணையி லுள்ளம்
களவு போனதே !
வண்ணக் கனவு வளைய வந்து
மனத்தைத் தாக்குதே !!
இதழ்கள் ஒட்டிப் பேச மறந்த
இதயம் துடிக்குதே !
மிதந்து செல்லும் மேக மாக
விண்ணில் அலையுதே !
வதனப் பொட்டு நிலவு போன்று
வடிவங் காட்டுதே !
உதயங் காணும் கிழக்கின் சிவப்பாய்
ஒளிர்ந்து மின்னுதே !!
அன்னம் தோற்கும் அவள்தம் நடையில்
அழகு சிரிக்குதே !
சின்ன விடையின் வளைவில் வழுக்கிச்
சேலை நழுவுதே !
பின்னிப் போட்ட கூந்தல் தன்னில்
பிச்சி மணக்குதே !
கன்னல் மொழியில் அழைக்கும் போது
காதி லினிக்குதே !!
உமது படைப்புகளின்..
தேச விடுதலை வேண்டிய வரிகளில்
தேகத்தினுள் எரிதழல் காட்டம் உணர்ந்தோம்...
காதல் நயம் சொட்டும் இடங்களில்
அன்பு இலக்கணம் கண்டு
அகமகிழ்ந்தோம்....
இறைவியிடம் வரம் தேடிய வரிகளில்
உள்ளத்து உணர்வும்
உயிரின் அறிவுமே
தெய்வம்-என
உணர்ந்தோம்....
இனியவை நாற்பது என்றில்லாமல்
இவ்வுலகம் இனிது- என்கையில்
அயர்வு நீங்கீ துணிவு
கொண்டோம்...
முண்டாசு புலவனே
செம்மொழி போல்-என்றும்
இளமைத் தோற்றத்துடன்
உம்மை காணப்பெற்றமை
எமக்கு
வரமா?
சாபமா?
வண்ண விருத்தம் !!!
**************************
மழைச்சார லோடு முகிற்கோலம் போட
***மலைக்கோயில் மீது மயிலோடே
எழிற்கூடு மாறு தனித்தாடு வேல
***இளைக்காம லோடி வரவேணும் !
அழைக்காத போதும் விழிப்போடு பேணு
***மருட்தேவ னேவு னிணையோடே
செழிப்பான சோலை மலைக்கார நீயும்
***சிறப்போடு வாழ அருள்வாயே !
சியாமளா ராஜசேகர்
காச்சமரம் சாஞ்சிருச்சி
காத்துகொன்னு போட்டுருச்சி !
கண்ணுபட்டுப் போயிருச்சோ
காலனது வேலதானோ ??
பூச்சூட்டிப் பாத்தபுள்ள
பூப்படஞ்ச செல்லமவ
பூமிக்குப் பாரமுன்னு
புயல்கொண்டு போயிருச்சோ ??
பேச்செழந்து நடபொணமா
பீதியில ஒறஞ்சிநிக்கோம் !
பேக்காத்துப் போட்டஆட்டம்
பேதலிக்க வச்சிருச்சே !!
சீச்சீன்னு யெம்பொழப்பு
சீரழிஞ்சி போயிருச்சே !
சீறிவந்த கசாப்புயலு
செறகொடிச்சிப் போட்டிருச்சே !!
காதடச்சிப் போயிருக்கு
கடும்பசியும் தாங்கலயே
கால்வவுறு நெரம்பலயே
கால்கையில வலுவுமில்ல !!
வேதனையச் சொன்னாத்தான்
வெந்தமனம் ஆறுமய்யா
வேரோட நாசமானா
வேறென்ன செய்வதய்யா ??
ஆதரவா அரசுமில்ல
ஓவ்வொரு நாளும்
புதிதாய் தோன்றும். 👁️
ஓவ்வொரு நிமிடமும்
உனையே சுழலும் 👀
ஓவ்வொரு நொடியும்
உனையே எழுதும். ✒️
இரவல் கவிதையாடி
நான் உனக்கு. 📜
இன்பமாய் வாசித்து
எனை அகழ்வி. 🗝️
உதட்டு வரிப்பள்ளத்தில்
எனையே தொலைத்தேன். 💋
உறங்கிக்கிடந்த இதயம்
இனிப்பிரிவை விரும்பாது. 💔
இரவின் தனிமையில்
மின்மினிப்பூச்சாய் ஒளிர்கிறாய். 🐞
வறண்ட தொண்டையில்
நீராய் நுழைகிறாய் . 💦
இந்த ஏழைக்காதலனின்
முகவரியை நீ ..................💃
இரவிலும் கூட விழித்திருந்தால் உறங்காமல்
என் நினைவாலே
கனவிலும் நான் வருவேன் என்று
அறியாமல் அவள் !
என்னவளே கண்ணுறங்கு
நாம் கனவில் சந்திப்போம்.....
அரிது !! அரிது !!
"கண்ணண் குழல் ஊதும்" அழகில் மயங்காத மங்கையும் அரிது !!!!
"பெண்கள் குழல் கோதும்" அழகில் மயங்காத ஆணும் அரிது !!!!