வண்ண விருத்தம்

வண்ண விருத்தம் !!!
**************************

மழைச்சார லோடு முகிற்கோலம் போட
***மலைக்கோயில் மீது மயிலோடே
எழிற்கூடு மாறு தனித்தாடு வேல
***இளைக்காம லோடி வரவேணும் !
அழைக்காத போதும் விழிப்போடு பேணு
***மருட்தேவ னேவு னிணையோடே
செழிப்பான சோலை மலைக்கார நீயும்
***சிறப்போடு வாழ அருள்வாயே !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Dec-18, 3:36 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 71

மேலே