எழுசீர்ச் சந்த விருத்தம்

எழுசீர்ச் சந்த விருத்தம் ..!!!

மந்தி யாட மயிலு மாட
மானு மாடி மகிழுதே !
வந்த யானை யோடு காளை
மாடு கூடி யாடுதே !
அந்தி வானை மஞ்சு மூடி
அழகு கவிதை யாகுதே !
இந்த நேர மின்ப மாக
என்ற னுக்கு மானதே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Dec-18, 3:22 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 39

மேலே