தந்தைப்ரியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தந்தைப்ரியன்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  03-Jun-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Aug-2018
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..!!! தந்தை வாக்கே வேதவாக்கு...!!!

என் படைப்புகள்
தந்தைப்ரியன் செய்திகள்
தந்தைப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2018 3:32 pm

" செம்மொழியானா தமிழ்மொழியே "

தமிழன்னை பெற்று வளர்த்த தனித்தமிழே நம் சங்கத்தமிழ்
மூவேந்தர்கள் வெற்றியை பாடிய தமிழ் நம் பைந்தமிழ்
வள்ளுவனின் மூன்றாம் பாலில் மயங்கிய வெண்பா தமிழ்
கம்பனின் கைவண்ணத்தில் கவி பாடிய சங்க கவிதமிழ்

தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த தமிழனுக்கு
தமிழ் மொழி அங்கீகாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லையே
நம்மோடு வாழ்ந்த தமிழ் தமிழ் தமிழ் தமிழறிஞர்
முத்தமிழ் அறிஞர் தமிழுக்கு செம்மொழி மாநாடு செய்து
தமிழையும் தமிழனையும் சிறப்புற செய்தார்

மேலும்

தாய்மொழிப் பற்றையும் தமிழர் நிலையையும் அருமையாகப் பதிவிட்டீர். வாழ்த்துகிறேன். தாய்மொழிப் பற்றில்லாத் தமிழரே எண்ணிக்கையில் அதிகம். அவர்களைப் பொருளியமும் பிறமொழிப் பெயர்களும் ஆட்டிப்படைக்கின்றன.தமிழர் என்ற உணர்வே இல்லாதவர்களை யார் மாற்ற முடியும். 13-Sep-2018 4:26 pm
தந்தைப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2018 3:11 pm

அன்புள்ள அப்பா

சிறுவயதில் நான் எழுதிய எழுத்துக்கள்
சிந்தனையற்றவன் எழுதியதை போல் இருந்தது,
என் கைபிடித்து நீர் எழுதிய எழுத்துக்கள்
என்னை சிறந்த சான்றோனாக மாற்றியது.

என் வாழ்கையை செம்மைப்படுத்தி
என் வாழ்கையோடு வாழ்ந்த
என் வாழ்க்கைக்கு உரிய அர்த்தமே
என் வாழ்வு முழுவதும் உமக்கே

என் அகராதியில் அறிந்த எழுத்துக்கள்
என் அகத்தில் தெரிந்த எழுத்துக்கள்
என் சிந்தையிலுள்ள எழுத்துக்களைவிட
உம் எழுத்துக்கள்
அழகான ஓவியமாக
அச்சுப்பொறியில் பதியப்பட்ட
ஆண்மை பொருந்தி உள்ளது

மேலும்

தந்தைப்ரியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2018 3:35 pm

அப்பா
என் மேல் ஏன்
இவ்வளவு கோபமாக
இருந்தீர்கள் ,

அப்பா
என்னை தனியா
விட்டு செல்ல அவ்வளவு
விருப்பமா,

அப்பா
நீங்களின்றி
நான்படும் துயரம்
எண்ணிலடங்கா,

அப்பா
எங்கே இருக்கிறாய்
உன்னை காண துடிக்கிறது
என் கண்கள்

அப்பா
நீங்கள் சென்ற இடம்
சௌகரியமாக
இருக்கிறதா

அப்பா
தினமும் இரவில்
தங்களோடு பேசுவதை
சுகமாக நினைக்கிறேன்

அப்பா
தினமும் தங்களுக்காக
நான் காத்து கிடப்பேன்
கனவினில்

என் கனவு நாயகனே

மேலும்

கருத்துகள்

மேலே