கனவின் நாயகன்

அப்பா
என் மேல் ஏன்
இவ்வளவு கோபமாக
இருந்தீர்கள் ,

அப்பா
என்னை தனியா
விட்டு செல்ல அவ்வளவு
விருப்பமா,

அப்பா
நீங்களின்றி
நான்படும் துயரம்
எண்ணிலடங்கா,

அப்பா
எங்கே இருக்கிறாய்
உன்னை காண துடிக்கிறது
என் கண்கள்

அப்பா
நீங்கள் சென்ற இடம்
சௌகரியமாக
இருக்கிறதா

அப்பா
தினமும் இரவில்
தங்களோடு பேசுவதை
சுகமாக நினைக்கிறேன்

அப்பா
தினமும் தங்களுக்காக
நான் காத்து கிடப்பேன்
கனவினில்

என் கனவு நாயகனே

எழுதியவர் : முரு தீனதயாளன் (19-Aug-18, 3:35 pm)
சேர்த்தது : தந்தைப்ரியன்
Tanglish : kanavin naayagan
பார்வை : 70

மேலே