அதுவரை அன்பே --- முஹம்மத் ஸர்பான்

உலகம் எதுவரை
அதுவரை அன்பே
கங்காரு போல
என்னுள் உன்னை
சுமந்திட ஆசை
மரணம் எதுவரை
அதுவரை அன்பே
ஒட்சிசன் போல
உந்தன் மூச்சினை
அருந்திட ஆசை
பயணம் எதுவரை
அதுவரை அன்பே
நிழல்கள் போல
உந்தன் பின்னால்
நகர்ந்திட ஆசை
கண்ணீர் எதுவரை
அதுவரை அன்பே
இமை உளி போல
குட்டிமா ஞாபகம்
செதுக்கிட ஆசை
ஜன்மம் எதுவரை
அதுவரை அன்பே
கருவறை போல
பிரசவ அறையில்
துடிதுடிக்க ஆசை
தென்றல் எதுவரை
அதுவரை அன்பே
முகத்தாள் போல
செல்கள் எங்கும்
நொறுங்கிட ஆசை
சிலுவை எதுவரை
அதுவரை அன்பே
செல்லமகன் போல்
அவள் கவிஞனாய்
உக்கிப்போக ஆசை


குறிப்பு:- 'முகத்தாள்' என்ற சொல்லை 'கண்ணாடி' என்பதற்கு புதிதாக பயன்படுத்தினேன்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (22-Mar-18, 6:03 pm)
பார்வை : 273

மேலே