காதல் மாற்றம்
காதலே என்னுள் நீ வந்ததின் விளைவு
சுவர் இல்லா சித்திரம் ஆனேன்
சுவாசிக்க தெரியாது இதயமானேன்
நடிக்க தெரியாது நடிகனானேன்
விழிகள் இருந்தும் தூக்கம் இழந்தேன்
தூக்கம் இன்றியும் கனவில் மிதந்தேன்
தனியே பேசி திரிந்தேன் பைத்தியமுமின்றி
காயம் ஏதுமின்றி வலியுணர்ந்தேன்
தினம் தினம் சண்டையிட்டேன் தோல்வித்தெறிந்தும்
வெட்கத்தின் வாசலுக்கு தாளிட்டேன்