அதிகாலை முதலிரவு
முத்துச் சிரிப்பழகி
ஒருமுத்தம் தருவாயா...
பக்கம் நான்வரவே
புதுவெட்கம் கொள்வாயா...
நித்தம் தவிக்கிறதே
என் நித்திரை அறிவாயா...
சித்தம் சேராமல்
நின் யுத்தம் செய்வாயா...
கூடல் நாயகன்
உன் கூட இருக்கிறேன்..!
கூச்சம் நீ தொலைத்தால்
ஒரு குழந்தை கிடைத்திடுமே..!
தேடல் குறையாமல்
உன் தேவை தீர்க்கிறேன்..!
தேனிலவு பாதையில்
நம் தேகம் இணையாதா..!
மலருக்கு தேன் தரவே
மருகுதடி இவ் வண்டு..!
மகரந்தம் சேரட்டுமே
மனம் கொஞ்சம் இறங்கிவிடு..!
சுனையின் நீர் ஊற்று
சுகம் காண பெருகுதடி..!
சுதந்திரம் எனக்களித்து
சுவை காண முயன்றுவிடு..!
அணை போட நினைக்காதே
அன்புக்கு திறன் அதிகம்..!
அணைத்துக்கொள்ள அனுமதித்தால்
அதிகாலை முதலிரவு..!