யாவும் பறந்தோடும் அவன் முகம் கண்டால்
எதையும் செய்ய விரும்பாது
சாய்ந்திருக்க விரிக்கும் உன் பாயையும்
காண வரவில்லையென
அவனைத் திட்டித் தீர்க்கும்
உன் வாயையும் சுருட்டி மூடி வை ..
உன் கோபமும் சோம்பலும்
அவன் முகம் கண்டால்
விரண்டோடும் மழைக்கு
முளைத்த காளான்கள்
என்பது உன் உள்ரங்கம் அறிந்த
மனமாகிய எனக்கல்லவா தெரியும்
ஆக்கம்
அஷ்ரப் அலி