வந்துவிடு கண்மணியே
தூக்கம் கூட துறவறம் போனது!
தாகம் கூட தவித்து நிற்கிறது!
உணவு கூட உண்ணாவிரதம் இருக்கிறது!
நினைவு கூட நிலையில்லாமல் போனது!
கனவு கூட கானலாய் ஆனது!
காகம் கூட கவிதை பாடுது!
மேகம் கூட அனலை பொழியுது!
இத்தனை மாற்றங்கள்
எனக்குள்
நிகழ்த்தும் என் அன்பே!
எப்பொழுது உனை
பார்ப்பேன் எந்தன் கண் முன்பே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
