சுதாவி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சுதாவி |
இடம் | : MADURAI |
பிறந்த தேதி | : 06-Apr-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1634 |
புள்ளி | : 338 |
உன்னை எண்ணி இன்று உயிர் கரைகிறது!
கண்கள் இரண்டிலும் கண்ணீர் அருவி வழிகிறது!
இதயம் கணக்கிறது, உன் நினைவு எனக்குள் கூடி போனதால்!
உதட்டு சாயம் கூட உன் பெயரால் சிவக்கிறது!
உன் பெயர் ஒலிக்கும் திசை நோக்கி பறவையாய் பறக்கிறேன்!
ஒளி என விழிக்குள் வந்தவனே!
தீபம் போல் மிளிரும் பேரழகா!
தீப்பந்தமாய் என்னை கொளுத்தாதே!
நீராக எனக்குள் வந்து என் காதல் தாகம் தீர்த்திடு!
வெண்ணிலவும் உறங்கி போனது!
விண்மீனும் தூரமும் போனது!
தென்றல் வந்து பேசவில்லை!
தேகம் இன்று குளிரவில்லை!
இருளின் இருட்டில் இதயம் மிதக்குது!
துடிக்கும் இமைக்குள் உன் பிம்பம் மலருது!
இரவும் மொட்டவிழ்ந்தது!
விழிகள் மட்டும் உன்னை எண்ணி உறக்கமற்று தவிக்கிறது!
என்னவளே!
சினுங்கும் செல்போன்
மணிக்காக தினம், தினம் ஏங்குகிறேன்!
உற்சவர் வரவை எதிர்நோக்கும் பக்தனாய் உன்
அலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறேன்!
குயிலோசை எழுப்பும் பறவையே
உன் எழில்முகம்
காண்பது எப்போது!
வாசனை பரப்பும் வண்ண
மலரே நீ
வருகை புரிவது எப்போது!
திரையிட்டு திருமுகத்தை மறைக்காதே!
கடல் அலையாய் இல்லாமல்
என் கண் இமையில்
கரை சேர்த்திடு!
செவ்வானம் எங்கும் உன் முகம்!
செவ்விதழ் இரண்டும் உன் பெயர்!
கண்களில் எங்கும் உன் பிம்பம்!
கனவுகளில் என்றும் உன் ரூபம்!
உன் இதழ்களின் ரேகையில் என் ஆயூளை ஆருடம் பார்க்கிறேன்!
இமயத்தின் குளிர்ச்சியை
உன் பேச்சில் நான் கேட்கிறேன்!
பூக்கள் உன்னை பார்த்து
நாணம் கொள்ளும்!
புன்சிரிப்பு என் உயிரை
தினமும் கொல்லும்!
மழையென எனக்குள் வந்துவிடு!
என் உயிரை கொஞ்சம்
காதலில் நனைய விடு!
ஒரு முறை அல்ல!
பல முறை பார்க்கிறாய்!
ஒர கண்ணால்!
கண்ணோடு கண் கலந்து புது வண்ணம் பிறக்குது!
என் ஜீவனுள்!
தொலைவில் இருந்து பார்த்து பார்த்து என் இதயத்தை கொய்கிறாய்!
அருகில் வந்தால் இதழோர புன்னகை பூக்களை என் மேல் கொட்டி விட்டு ஓடுகிறாய்!
போதுமடி உன் விளையாட்டு!
பார்வையாலே என்னை கொல்லாதே!
மின்னலென ஒரு வார்த்தை சொல்லிச்செல்!
என் உயிர் துள்ளிக்குதிக்கும்!
எனது வாழ்வின் முதல்
கதாநாயகன்!
அவர் அறியா விசயம் ஏதுமில்லை என்றிருந்தேன்!
பிஞ்சு குழந்தை எனை கொஞ்சி வளர்த்தவர்!
வெயில்பட்டு கருத்துவிடுவேனோ என விழியில் வைத்து வளர்த்தவர்!
ஊரை கண்டு ரசித்திட தலையில் அமர்த்தி ஆனந்தம் கொண்டவர்!
நான் வளர வளர எதிரியாய் தெரிந்தவர்!
வசை பல பொழிந்தாலும் நெஞ்சுக்குள் வாசம் செய்தவர்!
அடித்து கண்டித்தாலும் அன்பை மனசுக்குள் மறைத்து வைத்தவர்!
கண்களில் நீர் வடியாமல் எனை மகிழ வைத்து பார்த்தவர்!
என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஓளி விளக்கு அவர்!
பட்டபடிப்பு படித்தவனுக்கு வாழ்க்கை பாடம் சொல்லி தந்தவர்!
இன்று நீங்கள் இல்லையென்றாலும் என் நெஞ்சுகுள்
நானின்றி வேறில்லை
நீ முன் செல்ல
நொடிப் பொழுதும் பிரியாமல்
உனை
தொடர்ந்து வரும் நிழல்
நானின்றி வேறில்லை
நீ தனிமையில் தவிக்கையில்
தனிமைச் சிறை தகர்க்க
உனை
வருடும் பூங்காற்று
நானின்றி வேறில்லை
நீ வெம்மையில் வாடும்போது
தேகம் குளிர்விக்க
உனை
சிலிர்க்க வைக்கும் மழைச்சாரல்
நானின்றி வேறில்லை
காண நினைக்கும் பொழுது
கண் முன் விரியும்
தொடு வானமும்
நானின்றி வேறில்லை
கதைக்க நினைக்கும் காலம்
செவி வழி நுழையும்
குயிலோசையும்
நானின்றி வேறில்லை
என் சுவாசம் வேண்டும்போது
உன் நாசி நுழையும்
மலர் வாசம்
நானின்றி வேறில்லை
விடியல் தேடும் நேரம்
கண் முன் விரிய
ஆயுள் முழுவதும் உன் அரவணைப்பில் வாழ ஆசை கொண்டேனடா
உன் முகம் பார்த்து விடியும் விடியல் உன் நெற்றி முத்தத்தோடு தொடரும் காலை என் சிகை நனைத்த நீரானது உன் துயில் கலைக்க ஆசை கொண்டேனடா
உன் தலை நனைத்த நீரானது என் முகம் தெளிக்க ஆசை கொண்டேனடா
நெற்றி திலகம் நித்தமும் நீ இட ஆசை கொண்டேனடா
உனக்காய் நான் சமைக்க
எனக்கு ஆசையாக ஊட்டி விட ஆசை கொண்டேனடா
கதவோரம் கையசைத்து நானிருக்க நெற்றி முத்தமிட்டு நீ பணி செல்ல ஆசை கொண்டேனடா
படபடப்பாய் கழிக்கும் உன் பகற்பொழுதில் பத்து நிமிட இடைவேளை கிடைப்பினும் பாசமாய் என்னோடு செலவிட அவ்விடத்தில் காமம் இல்லாத காதலை நான் உணர ஆசை கொண்டேனடா
வேறு என்ன வேண்டும் கண்மணி!
போதும்!
இதுபோதும்!
காய்ந்து போன இதயபூமியில் மழையின் முதல்துளியாய் எனக்குள் விழுந்தவள் நீயடி!
இதயம் இன்று பந்தாய் மாறி போனதடி!
கானம் பாடும் உன் கொலுசின் ராகம் கேட்டு உருகியதடி!
உவமை என உயிருக்குள் நுழைந்தவள் நீயடி!
உயிரை இரு விழியால் கடைந்தவள் நீயடி!
பறக்கும் ஒரு பறவை ஆனாயடி!
பாவி! எந்தன் நெஞ்சில் நுழைந்தாயடி!
சுவாசகாற்றில் அனலென நுழைந்தாயடி!
அந்த நொடி முதல் அன்பே என்னை தொலைத்தேனடி!
காந்தம் என மனசையும் கவர்ந்தவள் நீயடி!
மலையில் விழும் பனியென மனசுக்குள் உறைந்தவள் நீயடி!
போதும்!
இது போதும்!
வேறு என்ன வேண்டும் கண்மணி!
மின்சாரம் இல்லாத வேளையில் மெழுகுவர்த்தி வெளிச்சமாய் எனக்குள் வந்தவள் நீ!
உன்னை பற்றிய நினைவுகள் மட்டும் மனகுளத்தில் தினமும் துள்ளிக்குதிக்கிறது!
பள்ளிமேஜையில் உன்பெயரை காம்பஸ் கொண்டு எழுதி ரசித்த நாட்கள்!
பள்ளிக்காலத்தில் உன் புகைப்படத்தை சட்டைபையில் பத்திரமாய் வைத்திருந்து பார்த்து ரசித்த நாட்கள்!
பள்ளிவாசலில் உன் வருகையை எதிர்பார்த்து பரிதவித்து காத்திருந்த நாட்கள்!
சாலையோர கள்ளிச்செடியில் நம் இருவர் பெயரையும் எழுதி பார்த்த நாட்கள்!
சாமி கும்பிடும் வேளையில் உன் நெற்றில் திலமிட்டு மகிழ்ந்த நாட்கள்!
தூங்கும் வேளையில் என் கனவுக்குள் வந்து கலவரம் செய்ய நாட்கள்!
உன் கூந்
மனசை குளிர்விக்கும் மழையில் ஒற்றை குடை பிடித்து ஓரமாய் காத்திருக்கும் பூங்கொத்து அவள்!
தூறல்கள் அவள் மேல் படும் போது
ஏனோ என்னை அறியாமல்
என் ஜீவன்
துள்ளிக்குதிக்கிறது!
வீசும் தென்றல் காற்று
கூட மெல்லாமாய் அவள்
கன்னங்களை
தீண்டி செல்கிறது!
பார்க்கும் என் நெஞ்சோ
பனிக்காற்றாய் உறைந்து
போகிறது!
கனவுப்பெண்னே!
கண்ணாடி பாதரசமும்
கரைந்து போனது
உனது பிம்பம் பட்டதாலோ!
காட்டு மூங்கில் கீற்றுகள்
முடைந்து தொட்டில்
செய்தது உன்னை தாலாட்டவோ!
எரிமலை குழம்புகள் எழுந்து சிற்பமாகி போனது உனது
அழகை ரசிக்கவோ!
வின்மீன்கள் கூடிநின்று வினா எழுப்புவது உனைவிட பேரழகி இப்பிரபஞ்சத்தில்
யார் உள்ளார் என்பதாலோ!
கனவுகளை அலங்கரிக்கும் கண்மணியே!
உனை கை பிடிக்கும் நாள்
எனக்கு திருநாளே!
நண்பர்கள் (15)

வாசு
தமிழ்நாடு

சத்யா
Chennai

பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி
