தாகம் தீர்த்திடு
உன்னை எண்ணி இன்று உயிர் கரைகிறது!
கண்கள் இரண்டிலும் கண்ணீர் அருவி வழிகிறது!
இதயம் கணக்கிறது, உன் நினைவு எனக்குள் கூடி போனதால்!
உதட்டு சாயம் கூட உன் பெயரால் சிவக்கிறது!
உன் பெயர் ஒலிக்கும் திசை நோக்கி பறவையாய் பறக்கிறேன்!
ஒளி என விழிக்குள் வந்தவனே!
தீபம் போல் மிளிரும் பேரழகா!
தீப்பந்தமாய் என்னை கொளுத்தாதே!
நீராக எனக்குள் வந்து என் காதல் தாகம் தீர்த்திடு!