வேறு என்ன வேண்டும் கண்மணி
வேறு என்ன வேண்டும் கண்மணி!
போதும்!
இதுபோதும்!
காய்ந்து போன இதயபூமியில் மழையின் முதல்துளியாய் எனக்குள் விழுந்தவள் நீயடி!
இதயம் இன்று பந்தாய் மாறி போனதடி!
கானம் பாடும் உன் கொலுசின் ராகம் கேட்டு உருகியதடி!
உவமை என உயிருக்குள் நுழைந்தவள் நீயடி!
உயிரை இரு விழியால் கடைந்தவள் நீயடி!
பறக்கும் ஒரு பறவை ஆனாயடி!
பாவி! எந்தன் நெஞ்சில் நுழைந்தாயடி!
சுவாசகாற்றில் அனலென நுழைந்தாயடி!
அந்த நொடி முதல் அன்பே என்னை தொலைத்தேனடி!
காந்தம் என மனசையும் கவர்ந்தவள் நீயடி!
மலையில் விழும் பனியென மனசுக்குள் உறைந்தவள் நீயடி!
போதும்!
இது போதும்!
வேறு என்ன வேண்டும் கண்மணி!