காதலில் ஒரு நட்பு

பாவாடை சட்டைப் போட்ட
பள்ளி பருவத்தில்
என் பார்வையில் - ஒருவன்
தென்பட்டான்! அவன்
பார்வைகளில் தென்பட்ட நாள்முதலாய்
பாலைவனமாக கிடந்த
என் வாழ்வில் -- சில
பனித்துளிகள் விழத்தொடங்கியது!!


அவன் கன்னத்தின்
கருநிற மச்சத்தில்
என் கனவுகள் பூர்த்தது...

வசிகர சிரிப்பில் என் வயது
வழிமாறிச் சென்றது....

தினம் ஒருமுறை
அவனை பார்க்க
எனது ஆசைகள்
அடம்பிடித்தது....


தினம் ஒருமுறை
பார்த்தாலும் மறுமுறை
பாரக்க வேண்டுமென்று -- அவனை நோக்கியே
என் பாதங்கள் படர்ந்து சென்றது!

கண்கள் ஒன்றாக
சந்தித்த ஒருநாளில்
காதலை வெளிப்படுத்தினேன்! என்
கண்களின் ஏக்கம் புரியாதவன்
காதலையும் காகிதமாக
வீசி எறிந்தான்!!

காதலை வீசி எறிந்தும்
என் காதல் அவனை விட்டு
விலகவில்லை -- காதலை
வீசி எறியும் ஒவ்வொரு முறையும்
ஒருவித விருப்பம்
அவன்மேல் தோன்றியது!!

"காதலியை கைதியாக
பார்க்கும் சிலரின் மத்தியில்'
என் கண்களில் தென்படவேண்டாமென்று
விழிகளுக்கு எட்டாமல்
விடுமுறை எடுத்துச் சென்றுவிட்டான்!!

விழிகளுக்கு எட்டாமல்
விடுமுறை எடுத்தவன்
என் இதயத்தில் இருக்கும் விருப்பத்தை
எதைக்கொண்டு மறைப்பான்jQuery17106543931664022343_1558528744713...

சின்னதாய் குழிவிழும்
அவனின் கன்னத்தில்
சிறகடித்துக்கொண்டே
என் காலத்தைக் கழித்தேன் -- மூன்று ஆண்டு
பிரிந்து முழுவதும்
முகமதைக் கண்டேன்!!

முரட்டுத்தனமும் குறையவில்லை
முரண்பாடும் குறையவில்லை
குழிவிழும் கன்னத்தில்
நான் மீண்டும் மீண்டும் குழைந்தேன்!!

அந்த மயக்கத்திலே
அனுதினம் பயணித்தேன்...

அந்த நேரத்தில்
உன்னுடன் ஒரு பயணம் வேண்டுமென்று
என்னோடு பேசினான்!
வாயடைத்துப்போனேன்.....

ஏகாந்த கனவுகளில்
எப்போதும் வாழ்ந்துவந்தவள்
அன்றுதான்
என் நினைவுகளுக்கு வந்தேன்!

பாதையில் பாதம் படாமல்
கொடியாக படர்ந்தேன்....

பாவை என்னை
அவன் தொட்டு தீண்டுவானென்று
பகல் நிலவாக நான்
பரவசித்து தவித்தேன்!!!


கைகள் தீண்டி
காதலனாக வருவான் என்று
நாடிநின்றேன் --- ஆனால்
அடிதூரம் நகர்ந்துநின்று
வெறும் காவலாக
அவன் நிற்க வாடிநின்றேன்!!

பார்வைகள் மோதி
பாவையின் தலைகோதி
பயணங்கள் போகுமென்று
நானிருந்தேன் -- ஆனால்
அவன் சற்று நகர்ந்து நின்று
நான் வேறென்றான்!!

கொண்ட காதலை
கொஞ்சம் காட்டினேன்! என்னை
கொஞ்ச வராமல்
கொள்கை முக்கியமென்றான்!!


உணர்வுகளை புரிந்துகொள்
என்றேன் -- அவன்
உனக்கு ஏதும் புரியாதென்றான்!!

வயதினை காரணம்
காட்டினேன் -- வாழ்க்கை
என்னாவதென்றான்!!

உயிராக தொடர்ந்து
உடன் வரவா??
என்றேன் -- தொடராமல்
தோழியாக தொலைவில் இருப்பாயா??
என்றான்!!

தோழியாக தொலைவில்
இருந்தால் என்ன?
தொடர்ந்து வரும்
காதலியாக இருந்தால்??
"அவனின் நினைவுகளை""
தொட்டுக்கொண்டு -- நீடித்து
வாழலாமென்று நினைத்துக்கொண்டேன்!!

குறுஞ்செய்திகளில்
குரும்பாய் அவன் பேச
தினம் தினம்
அரும்பாக மாறுகிறேன்...

குரலோசையைக் கேட்டுக்கொண்டு
என் இரவோடு
இசைப்பாடுகிறேன்...

மறைந்து நின்று
பார்த்துக்கொண்டே
என் மாதங்களை கழிக்கிறேன்...

நட்பில் இருந்து
காதல் உருவாகும் இந்த காலத்தில்
கன்னி நான்
காதலை மறைத்துக்கொண்டு!
" காதலில் உருவான நட்பாக"
காதலன் அவனின் விரல் பிடித்து
வீ(வி)தியைக் கடக்க
வாழ்வின் விளிம்புகளில்
காத்துக்கொண்டிருக்கிறேன்...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (28-Aug-18, 5:51 pm)
Tanglish : kathalil oru natpu
பார்வை : 1066

மேலே