உறைய வைத்தவள் நீ

மனசை குளிர்விக்கும் மழையில் ஒற்றை குடை பிடித்து ஓரமாய் காத்திருக்கும் பூங்கொத்து அவள்!

தூறல்கள் அவள் மேல் படும் போது
ஏனோ என்னை அறியாமல்
என் ஜீவன்
துள்ளிக்குதிக்கிறது!

வீசும் தென்றல் காற்று
கூட மெல்லாமாய் அவள்
கன்னங்களை
தீண்டி செல்கிறது!

பார்க்கும் என் நெஞ்சோ
பனிக்காற்றாய் உறைந்து
போகிறது!

எழுதியவர் : சுதாவி (27-Mar-18, 3:12 pm)
Tanglish : uraya vaithaval nee
பார்வை : 485

மேலே