கைபிடிக்கும் திருநாள்
கனவுப்பெண்னே!
கண்ணாடி பாதரசமும்
கரைந்து போனது
உனது பிம்பம் பட்டதாலோ!
காட்டு மூங்கில் கீற்றுகள்
முடைந்து தொட்டில்
செய்தது உன்னை தாலாட்டவோ!
எரிமலை குழம்புகள் எழுந்து சிற்பமாகி போனது உனது
அழகை ரசிக்கவோ!
வின்மீன்கள் கூடிநின்று வினா எழுப்புவது உனைவிட பேரழகி இப்பிரபஞ்சத்தில்
யார் உள்ளார் என்பதாலோ!
கனவுகளை அலங்கரிக்கும் கண்மணியே!
உனை கை பிடிக்கும் நாள்
எனக்கு திருநாளே!