இந்த மனிதன் எங்கே செல்கிறான்
இந்த மனிதன் எங்கே செல்கிறான்.
ஆராயி வன்மமாய் தாக்க படலாம்.
அவரின் மகளை கூட்டு வன்புணர்வு செய்யலாம் ..
மகனை அடித்தே கொள்ளலாம்..
மறுபுறம் எதிர்பாராமல் நடந்த ஸ்ரீதேவி மரணத்திற்கு
உச்சு கொட்டி மனிதம் பேசுகிறோம் ...
இந்த மனிதன் எங்கே செல்கிறான்.
மதுவெனும் ஆதிவாசி பசிக்காக தவறு செய்தால்
கட்டி வைத்து கூட்டமாய் அடித்தே கொல்கிறோம்..
இன்னும் தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என முழங்குகிறோம்..
மறுபுறம் நீராடியா மோடியையும்,மல்லையாக்களையும்
ஆயிரக்கணக்கான கோடிகளை கொடுத்து தப்பிக்க வைக்கிறோம்..
இந்த மனிதன் எங்கே செல்கிறான்.
மூளை சாவு அடைந்தால் இலவசமாக தன்னையே கொடுப்பவர்கள் ..
உயிரோடு இருக்கும் போதே உடலுறுப்பு தானம் செய்பவர்கள் .
இவர்களுக்கு மத்தியில்,
கருணை இல்லத்தில் மனித எலும்புகள் விற்கப்படுகிறது..
அதுவும் இறைவனின் பெயர் சொல்லி..
இந்த மனிதன் எங்கே செல்கிறான்.
சிரியா போரில் பிஞ்சு குழந்தைகளை கொல்கிறான்,
குடியிருப்புகளை கொளுத்துகிறான்..
மதம் பிடித்தவன்,
அதிகார வெறி பிடித்தவன்,
தன் ஆதிக்கத்தின் கீழ் காலனி நாட்டாக விரும்புபவன்..
மறுபுறம் ஐ.நா அமைதி காக்கிறது ..
வளைகுடா நாடுகள் கள்ள மவுனம் சாதிக்கிறது..
சிலருக்கு உள்ளூர குரூர சந்தோஷம் பிறக்கிறது...
இந்த மனிதன் எங்கே செல்கிறான்.
நீட் தேர்வு ரத்து போராட்டம்
கதிரமங்கலம் மீத்தேன் போராட்டம்
கீழடி அகழ்வாராய்ச்சி தொடர போராட்டம்
ஜல்லிக்கட்டு தடை நீக்க போராட்டம்
காவிரி நதிநீர் பங்கீடு போராட்டம்
மீனவர்கள் இலங்கை கடற்படையால் இறப்பது.
விவசாயிகள் கடன் தள்ளுபடி இல்லாமை..
நெல்லை தாமிரபரணி குடிநீர் பிரச்னை
முல்லை பெரியாறு அணை பிரச்னை.
தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை போராட்டம்
மதுரை வைகை ஆற்றில் மணல் மாபியாக்கள் கொள்ளை,
மதுபானம் என்னும் அரக்கன்
சாதிய,மத மோதல்கள்,ஆணவ படுகொலைகள்..
gst , demonetization ,
இன்னும் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும்
பிக் பாஸ்ஸிலும் ,சூப்பர் சிங்கரில்,சினிமா,
நாடக தொடர்களிலும்,கிரிக்கெட்டிலும்
இந்த மனிதன் மூழ்கி கிடக்கிறான்..
இந்த மனிதன் எங்கே செல்கிறான்..