உனக்காக காத்திருக்கிறேன்

ஆயுள் முழுவதும் உன் அரவணைப்பில் வாழ ஆசை கொண்டேனடா
உன் முகம் பார்த்து விடியும் விடியல் உன் நெற்றி முத்தத்தோடு தொடரும் காலை என் சிகை நனைத்த நீரானது உன் துயில் கலைக்க ஆசை கொண்டேனடா
உன் தலை நனைத்த நீரானது என் முகம் தெளிக்க ஆசை கொண்டேனடா
நெற்றி திலகம் நித்தமும் நீ இட ஆசை கொண்டேனடா
உனக்காய் நான் சமைக்க
எனக்கு ஆசையாக ஊட்டி விட ஆசை கொண்டேனடா
கதவோரம் கையசைத்து நானிருக்க நெற்றி முத்தமிட்டு நீ பணி செல்ல ஆசை கொண்டேனடா
படபடப்பாய் கழிக்கும் உன் பகற்பொழுதில் பத்து நிமிட இடைவேளை கிடைப்பினும் பாசமாய் என்னோடு செலவிட அவ்விடத்தில் காமம் இல்லாத காதலை நான் உணர ஆசை கொண்டேனடா

எழுதியவர் : தீபிகா. சி (16-Jun-21, 3:34 pm)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 344

மேலே