தீபிகா சி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தீபிகா சி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  19-Oct-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Nov-2020
பார்த்தவர்கள்:  478
புள்ளி:  59

என்னைப் பற்றி...

தமிழ் கவிதைகளில் ஆர்வம் அதிகம் உள்ள மதுரை மகள்

என் படைப்புகள்
தீபிகா சி செய்திகள்
தீபிகா சி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2022 11:42 am

காதல் நீ கண்ணீர் நீ
என் கரம் பிடித்த கனவும் நீயே
அன்பும் நீ அழுகையும் நீ
என் ஆறுதலும் நீயே
எண்ணம் நீ செயலும் நீ
என் ஏமாற்றமும் நீயே
பலம் நீ பலவீனம் நீ
என்னை பைதியமாக்குவந்தும் நீயே
இன்பம் நீ இருதயம் நீ
என்னை இம்சை செய்யபவனும் நீயே

மொத்தத்தில் என் உயிரும் உலகமும்
நீயே நீயடா

மேலும்

தீபிகா சி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2022 11:35 am

மூன்று முடிச்சிட்டு காதலன் கணவனான்
அவளை ஈண்டும் அவனை ஏற்று
அவனது முயங்கலை நாணாமுடன் ரசித்து
இனிதே தொடங்கியது இல்லறமும்
ஒரு திங்கள் கூட முழுமை அடைய விடுவதில்லை உடன் இருக்கும் உறவுகள்
இரிந்து நிற்கும் காலத்தில் வராத உறவுகளும் கூட
பார்த்தவுடன் நலம் விசாரிப்பதைபோல்
நல்ல செய்தி இல்லையா? என்று கேட்கும்
கேட்போரை நறுகென்று நாலு கேள்வி கேட்க
அடிமனம் உரும்பினாலும்
போலியான புன்னகையுடன் வேறல்
அவர்களை கடந்தவுடன் மறந்துவிடும் அந்த கேள்வி கேட்டவருக்கு - ஆனால்
மறந்தும் கூட மறப்பதில்லை அவர்களுக்கு
கேட்கும் கேள்வியோ கத்தியின்றி காயம் தரும்
என்ற மரபு கூட தெரிவதில்லை இந்த பேதைகளுக்கு
ஒரு சில திங்கள

மேலும்

தீபிகா சி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2022 11:18 am

உறக்கமும் உறங்கிதான் போய்கிறது
நீ உடன் இல்லாத பொழுது
நீண்ட நாட்களுக்கு பின் - என்
சிகை கண்ட தலையணை கூறியது
தனிமையின் பொருளை
அடிக்கும் கண்கள் - மருகனமே
அனைக்கும் கரங்கள் அனைத்தையும்
தேடுகிறேன் அருகில் நீ இல்லை

மேலும்

தீபிகா சி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2021 9:23 pm

ஏதமில்லா எண்ணங்கள் நெஞ்செத்தில் நிறைந்த நாட்கள் அவை
முதல் நாள் வகுப்பறை முத்தான நினைவுகளாக இன்றும் என்னில்
முதல் வகுப்பில் பாடம் கற்பித்த இரியர்
என்றும் என் அன்பிற்குரியர்
வள்ளிநாயகி என்ற வஞ்சனையில்லால்
வேம்பு மரத்தை சுற்றி வேண்டுதல்
வேய் கொண்டு வரும் விஜயன் விடுப்பிற்காக
கண்டிப்பான கணக்கு வாத்தியார் -
கறுழ் கொண்ட குந்தம்போல் ஆனோம்
வேட்டமில்லை விலக்க வழியும் இல்லை
உவலை என்று உணர்ந்தேன் - அன்று
அறிவியலை அழகாய் சொல்லித்தந்த
அன்னை கீதாலெட்சுமி
பகுத்துண்டு என்ற வள்ளுவன் வார்த்தைக்கு பின்னரே - எங்கள்
மதியமிகுதி
மணல் நனைத்த கொண்டல்
மனம் நனைத்த மழை
கவிழ்ந்து விழும் காகித கப்ப

மேலும்

அழகான நினைவுகளை தொகுக்க முயன்றிருக்கிறார்கள் இருந்தாலும் இன்னும் சற்று கூடுதல் சொற்களை சேர்த்து அழகு படுத்தி இருக்கலாம் 20-Jul-2021 9:56 pm
தீபிகா சி - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2021 3:34 pm

ஆயுள் முழுவதும் உன் அரவணைப்பில் வாழ ஆசை கொண்டேனடா
உன் முகம் பார்த்து விடியும் விடியல் உன் நெற்றி முத்தத்தோடு தொடரும் காலை என் சிகை நனைத்த நீரானது உன் துயில் கலைக்க ஆசை கொண்டேனடா
உன் தலை நனைத்த நீரானது என் முகம் தெளிக்க ஆசை கொண்டேனடா
நெற்றி திலகம் நித்தமும் நீ இட ஆசை கொண்டேனடா
உனக்காய் நான் சமைக்க
எனக்கு ஆசையாக ஊட்டி விட ஆசை கொண்டேனடா
கதவோரம் கையசைத்து நானிருக்க நெற்றி முத்தமிட்டு நீ பணி செல்ல ஆசை கொண்டேனடா
படபடப்பாய் கழிக்கும் உன் பகற்பொழுதில் பத்து நிமிட இடைவேளை கிடைப்பினும் பாசமாய் என்னோடு செலவிட அவ்விடத்தில் காமம் இல்லாத காதலை நான் உணர ஆசை கொண்டேனடா

மேலும்

அருமை 18-Jun-2021 11:37 am
நன்றி 17-Jun-2021 6:11 pm
நல்ல கற்பனை! வாழ்த்துக்கள்! 16-Jun-2021 8:43 pm
தீபிகா சி - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2021 1:31 pm

இன்பமான நினைவுகளின் சேமிப்பு பெட்டகமாக

கடந்த காலம் மீண்டும் வராது என்பது பொன்மொழி
கடந்து வந்த பாதையின் இன்பமான தருணங்களை மீண்டும்
கண் முன்னே காட்ச்சியாக நினைவுகூர்கிறேன்
உன்னால்

அழகான நினைவுகளை அடிக்கடி
பார்த்து ரசிக்க உதவுகிறாய்

பார்க்க துடிக்கும் மனதிற்கு பிடித்த உயிரான உறவுகள் எல்லாம் உன் தயவால் புகைப்படமாக பார்த்து இன்புறுகிறேன்

தவறிழைத்தவற்க்கு தண்டனை வழங்க சாட்சியாக சட்டத்தில் நீ

கும்பியினுள்ள குழந்தை முகம் காண மருத்துவத்தில் எக்ஸ் கதிர்களாக நீ

மேலும்

அருமை 02-Apr-2021 6:38 pm
இன்பமான நினைவுகளின் சேமிப்பு பெட்டகமாக கடந்த காலம் மீண்டும் வராது - பொன்மொழி உன்னால் நினைவுகூர்கிறேன் கண் முன்னே காட்ச்சியாக மீண்டும் கடந்து வந்த பாதையின் இன்பமான தருணங்களை அழகான நினைவுகளை அடிக்கடி பார்த்து ரசிக்க உதவுகிறாய்..! உயிரான உறவுகளை எல்லாம் பார்க்க துடிக்கும் மனதிற்கு பிடித்த உறவுகளை எல்லாம் பார்த்து இன்புறுகிறேன் உன் தயவால் புகைப்படமாக தவறிழைத்தவருக்கு தண்டனை வழங்க சாட்சியாக சட்டத்தில் நீ கும்பியினுள்ள குழந்தை முகம் காண மருத்துவத்தில் எக்ஸ் கதிர்களாக நீ இப்படியிருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். என் கருத்தில் பிழையிருந்தால் பொறுத்தருள வேண்டும். 24-Mar-2021 5:01 pm
நீங்கள் சொல்வது புரியவில்லை 24-Mar-2021 4:28 pm
பாட்டின் அடுக்கில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். 24-Mar-2021 4:22 pm
தீபிகா சி - தீபிகா சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2021 12:25 pm

அந்திவானம்

மஞ்சள் போர்வைக்குள் அந்திவானம்
வெற்றிலை மென்றது போல் சிவந்த சூரியன்
பகல் பொழுதில் உன் கடமையை சற்றும் சலிக்காமல் செய்ததால் சிறு கலைப்பு உன்னிடத்தில்
கலைப்பாற்ற ஓய்வெடுக்க செல்கிறாயோ???
உன் உறக்கம் உலகையே உறங்க வைக்குமே
வாழ்க்கையின் ஒட்டு மொத்த தத்துவத்தையும் ஒற்றை செயலில் உணர்த்துகிறாய் பகலில் விடிந்ததும் இரவில் மறைந்தும்
வாழ்வென்பதும் அப்படிதானே
சில நாட்கள் இன்பம் என்ற விடியலாலும் சில நாள் துன்பம் என்ற இருளாலும் நிறைந்தது
பகலெல்லாம் உன் மகன்(சூரியன்) வழிகாட்டினான்
இரவிலும் எங்கள் தனிமையை நீக்க உன் மகளை(மதி) அனுப்பினாய்.
உன் கடமைக்கு விடியலாய்
காதலில் கடுங்குளிராய்

மேலும்

நன்றி, அடுத்த முறை இந்த தவறை திருத்தி கொள்கிறேன் 24-Mar-2021 1:02 pm
வருணனைகள் நன்றாக இருக்கின்றன; ஆனாலும் தங்கள் சொல்ல வந்ததிலிருந்து சற்று வேறு பக்கம் போனதுபோல இருக்கிறது. 24-Mar-2021 12:55 pm
மேலும்...
கருத்துகள்

மேலே